Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,390.50
-19.89sensex(-0.03%)
நிஃப்டி22,932.45
-24.65sensex(-0.11%)
USD
81.57
Exclusive

Best of 2022 : சர்ப்ரைஸ் ஹிட் அடித்த தமிழ் படங்கள் 2022 | best tamil movies 2022

UDHAYA KUMAR Updated:
Best of 2022 : சர்ப்ரைஸ் ஹிட் அடித்த தமிழ் படங்கள் 2022 | best tamil movies 2022Representative Image.

கொரோனா ஊரடங்கு காலத்தைக் கடந்து தமிழ் சினிமா தனது சிறந்த பங்களிப்பை இந்த வருடம் கொடுத்துள்ளது. இதில் பல படங்கள் நாம் எதிர்பாராமலே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. 

படம் பற்றிய செய்திகள் வெளியாகும்போது பெரிய அளவில் நாம் கண்டுகொள்ளாமல் இருந்திருப்போம். ஆனால் அவை பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியிருக்கும். அப்படியான 6 படங்களைப் பற்றித்தான இப்போது பார்க்கவிருக்கிறோம். 

லவ் டுடே

Love Today' Review: Pradeep Ranganathan Takes You on a Weird Joy Ride With  Love

சொல்லப்போனால் யுவன் இசைக்காக மட்டுமே இந்த படத்தின் பாடல்கள் பேசப்பட்டன. கோமாளி படத்தை எடுத்த இயக்குநர் என்பதால் இவரின் மீது நம்பிக்கை இருந்தது ஆனால் அவரே நடிப்பதால் அது நெகடிவாக இருக்கும் என நினைத்தார்கள். ஆனால் அதுதான் ப்ளஸ். படத்தை மக்கள் கொண்டாடிவிட்டனர். முக்கியமாக இளைஞர்கள். டிரெணட் செட்டிங் படமாக அமைந்துவிட்டது. 

வெறும் 5 கோடி முதலீட்டில் இந்த படத்தை எடுத்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு 100 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்திருக்கிறது. எப்படியும் கமிஷன் எல்லாம் போக 60 கோடி அளவுக்கு லாபம் மட்டுமே இருக்கும் என பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி தெலுங்கில் வெளியிட்ட தயாரிப்பாளருக்கும் கோடிக்கணக்கில் லாபம்.  விரைவில் ஹிந்தியிலும் படம் ரிலீசாக இருக்கிறது. இதனால் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய டிமாண்ட் உருவாகியுள்ளது. 

அடுத்து இவர் விஜய்யுடன் இணைவதாக பேச்சு எழுந்துள்ளது. 


சர்தார்

Sardar movie review: Karthi shines as an action star in this spy thriller -  Hindustan Times

மிழ் திரையுலகின் முன்னணி நடிகராக மாறிவிட்டார் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியாகும் அத்தனை படங்களும் குறைந்தபட்ச வெற்றியைப் பெறும் என்கிற நம்பிக்கையை கோலிவுட்டில் விதைத்துவிட்டார். இவரது படங்கள் எப்போது ஒருவித எதிர்பார்ப்புடன்தான் வெளியாகும் என்றாலும், வசூல் ரீதியாக இவரால் என்ன செய்துவிட முடியும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். 

100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தார் கார்த்தி.  கார்த்தி ஜோடியாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இரட்டை வேடங்களில் சிறப்பாக நடித்திருந்தார் கார்த்தி. ஜி வி பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார் தான் என்றாலும் பின்னணி இசை அசத்தியது. 


திருச்சிற்றம்பலம்

Thiruchitrambalam Movie Review: What happens after death? Dhanush, Nithya  Menen film shows you - India Today

தொடர்ந்து சில தோல்விப் படங்களை அடுத்தடுத்து கொடுத்ததால் தனுஷ் அடுத்து என்ன படத்தில் நடிக்கிறார் என்பதை பலரும் எதிர் பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் திருச்சிற்றம்பலம் குறித்து எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. காரணம் இந்த படத்துக்கு அவர்கள் எந்த வித விளம்பரமும் செய்யவே இல்லை. கடந்த 2019ம் ஆண்டு வெளியான அசுரன் படத்தைத் தொடர்ந்து  மாறன், தி கிரே மேன், அந்தரிங்கி ரே என தமிழ், ஆங்கிலம், ஹிந்தி எந்த படமும் கைக்கொடுக்காத நிலையில் திருச்சிற்றம்பலம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. 

செல்வராகவனும் தனுஷும் இணையும் படம் என்பதால் நானே வருவேன் மீது எல்லார் கவனமும் இருந்த நிலையில், திடீரென ரிலீஸ் செய்து தமிழ், தெலுங்கு பெல்ட்களில் பெரும் வசூலைக் குவித்தது திருச்சிற்றம்பலம். 

இந்த படமும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலைப் பெற்றுக் கொடுத்தது. 


டான்

Don Movie Review - Only Kollywood

குப்பைகளைக் கூட காசு கொடுத்து வாங்குவார்கள் என எல்லா ரிவியூவர்களும் காரி உமிழ்ந்துவிட்டார்கள். அதனால் இந்த படம் நிச்சயமாக பெரிய அளவில் ஒர்க் ஆகப் போவதில்லை என்றார்கள். விநியோகம் செய்த உதயநிதி கூட பெரிய நம்பிக்கை இல்லாமலே வெளியிட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டது டான் திரைப்படம். 


ராக்கெட்ரி நம்பி விளைவு

R Madhavan's Rocketry: The Nambi Effect defames ISRO with lies about Nambi  Narayanan, say former scientists | Mint

ஸ்ரோவின் முன்னாள் தலைவர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ராக்கெட்ரி. அவரின் வாழ்க்கையில் நடந்த அவமானங்கள், சாதனைகள் என அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியது. 25 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த படம் 50 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது. 

மாதவனுக்கு தமிழ் சினிமாவில் பெரிய வசூல் இருக்காது என்றே பலரும் நினைத்த நிலையில், 50 கோடி வசூலைக் கொடுத்து தமிழக மக்கள் அவரைக் காப்பாற்றியுள்ளனர். 

நம்பி நாராயணனுக்கு அவர்கள் கேட்டுக்கொள்ளும் மன்னிப்பாகவும் இது அமைந்தது. 

டாணாக்காரன்

Taanakkaran review. Taanakkaran Telugu movie review, story, rating -  IndiaGlitz.com

சூல் ரீதியாக எதையும் முடிவு செய்துவிடக்கூடாது என்பதற்காக வரவேற்பு ரீதியாக இந்த படம். போனஸ்ஸாக ஓடிடியில் ரிலீசாகி கிட்டத்தட்ட அனைத்து ரிவியூவர்களாலும் பாராட்டப்பட்ட படம் இது. 

விக்ரம் பிரபு இதுவரை நடித்த படங்களிலேயே தி பெஸ்ட் என அனைவரும் பாராட்டிய படம் டாணாக்காரன். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்