Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அஜித் பட தயாரிப்பாளரைச் சந்தித்த ரஜினி மகள்! அதுக்காகத்தானா?

UDHAYAKUMAR July 25, 2022 & 16:40 [IST]
அஜித் பட தயாரிப்பாளரைச் சந்தித்த ரஜினி மகள்! அதுக்காகத்தானா?Representative Image.

அஜித் படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரைச் சந்தித்து பேசியுள்ளார் நடிகர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா. 

அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தயாரித்தவர் போனி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர். இவர் தற்போது அஜித் நடிப்பில் AK61 படத்தை தயாரித்து வருகிறார். இவரை நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா சந்தித்து பேசியுள்ளது பரபரப்பான செய்தியாகியுள்ளது. 

தனுஷை வைத்து 3, கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படங்களை இயக்கியிருந்த ஐஸ்வர்யா தற்போது இன்னொரு படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தன் தந்தையிடம் அவ்வளவு பணம் இருக்கையில் இப்போது இன்னொரு தயாரிப்பாளரை ஏன் அணுகவேண்டும் எனவும் பலர் கேட்டு வருகின்றனர். 

இன்னும் சிலரோ போனி கபூர் தயாரிப்பில் ரஜினி நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தை தொடர்ந்து ரஜினியை தயாரிக்கவுள்ளாரா போனி என பலரும் பேசி வருகின்றனர்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்