Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படும் வெளிநாட்டு, உள்நாட்டு படங்களின் பட்டியல் | chennai international film festival 2022 movies list

UDHAYA KUMAR Updated:
சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படும் வெளிநாட்டு, உள்நாட்டு படங்களின் பட்டியல் | chennai international film festival 2022 movies list Representative Image.

சென்னையில், இன்று (15-ம் தேதி)  துவங்கி, 22-ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பா.ரஞ்சித் இயக்கிய 'நட்சத்திரம் நகர்கிறது',  பார்த்திபன் இயக்கிய 'ஒரே ஷாட்' படமான் 'இரவின் நிழல்',  விஜய் சேதுபதி-சீனு ராமசாமியின் 'மாமனிதன்' உள்ளிட்ட 12  தமிழ்ப் படங்கள், திரையிடப்படவுள்ளன. 

 சர்வதேச திரைப்பட விழா இன்று துவங்கி வரும் 22ம் தேதி வரை 8 நாட்களுக்கு நடைபெறுகிறது. 20-வது சென்னை சர்வதேச திரைப்பட  (CIFF) விழாவில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட சில படங்கள் உட்பட மொத்தம் 51 நாடுகளிலிருந்து 102 படங்கள் திரையிடப்படுகின்றன.

தமிழக அரசு, இந்தோ சினி அப்ரிசியேஷன், பிவிஆர் சினிமா ஆகியவை இணைந்து, இந்த திரைப்பட விழாவை நடத்துகின்றன. நாளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் துவங்கும் இவ்விழாவை தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைக்கிறார்.

 ஒவ்வொரு ஆண்டும், 12 தமிழ் படங்கள் CIFF-ல் போட்டி பிரிவில்  தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதில் மூன்று படங்கள் சிறந்த படங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு  தகுதியான தமிழ் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள 12 தமிழ் படங்களில் கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'கார்கி', பா.ரஞ்சித்-ன் 'நட்சத்திரம் நகர்கிறது'. பார்த்திபனின் 'இரவின் நிழல்', விஜய் சேதுபதி-சீனு ராமசாமியின் 'மாமனிதன்', ராம்நாத் பழனிகுமாரின் 'ஆதார்', சிம்புதேவனின் ஆந்தாலஜி படமான 'கசடதபற', வைபவ் நடித்த 'பபூன்', மனோ வீ கண்ணதாசனின் 'இறுதி பக்கம்', நயன்தாரா நடித்த 'ஓ2' ஆகியப் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 'கடைசி விவசாயி', 'மாலைநேர மல்லிப்பூ', 'போத்தனுார் தபால் நிலையம்' ஆகிய படங்களும் திரையிடப்பட உள்ளன

ஆஸ்கர், கேன்ஸ், கோல்டன் லயன் விருது விழாவில் திரையிடப்பட்ட படங்கள், சென்னையில் நடக்கும் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. 'ஏஇஐஒயு' என்ற ஜெர்மன் படம், பெண்களுக்கு பிரத்யேக காட்சியாக திரையிடப்பட உள்ளது. 

World Cinema

1

A E I O U

2

Afrika

3

A Man

4

A Minor

5

A Piece of Sky

6

A Radiant Girl

7

Ann

8

Autobiography

9

Balaban

10

Beautiful Beings

11

Before Now and Then

12

Between Us

13

Beyond the Wall

14

Blast

15

Broker

16

Brother & Sister

17

Burning Days

18

Continental Drift

19

Diary of a Fleeting Affair

20

Father Pablo

21

Final Cut

22

Fishbone

23

Habib

24

Hard Shell, Soft Shell

25

Harkis

26

ID

27

Last Dance

28

Leila’s Brothers

29

Leonor will Never Die

30

Lord of the Ants

31

Loser’s Adventure

32

Loving Memories

33

Lovefilm

34

Lucky Chan-Sil

35

Mediterranean Fever

36

Melchior the Apothecary

37

Metronom

38

Mi Iubita Mon Amour

39

Move the Grave

40

My Girlfriend is the Revolution

41

My Imaginary Country

42

Natural Lefty

43

Neon Spring

44

No Bears

45

No Prior Appointment

46

Paloma

47

Parsley

48

Pierrot the Fool

49

Queens

50

Romanticism of Emad & Touba

51

Safe Place

52

Sami, Joe and I

53

Semret

54

Sick of Myself

55

Somewhere over the Chemtrails

56

Tales of One More Day

57

Tchaikovsky’s Wife

58

Tenzin

59

The Divide

60

The Fam

61

The Game

62

The Glass Room

63

The Gravedigger’s Wife

64

The Hotel

65

The Mayor

66

The Man Who Sold His Skin

67

The Night of the 12th

68

The Taste of Apples is Red

69

The Wait

70

Triangle of Sadness

71

Under the Fig Trees

72

Vanishing

73

Victim

74

Wolka

75

World War III

 

இந்தமுறை தமிழுக்கு என ஒன்பது விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லுாரி மாணவர்கள் தயாரித்த ஒன்பது குறும்படங்கள், சென்னையில் நடக்கும் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. ஒரியா, சமஸ்கிருத மொழி படங்களும், முதன்முறையாக திரையிடப்பட உள்ளன.

மேலும், கலை இலக்கிய துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்கும் 12 கலந்தாய்வு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 'பொன்னியின் செல்வன்', 'பீஸ்ட்', 'இரவின் நிழல்' படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுனர்களும் பங்கேற்று பேச உள்ளனர். அதோடு இன்னும் வெளியாகாத 'பிகினிங்', 'யுத்த காண்டம்', மற்றும் ''ஆடு' ஆகியவை அதிகாரப்பூர்வ தேர்வில் இடம்பெற்றுள்ளன. இவைகள் சிறந்த திரைப்பட விருதுக்கு போட்டியிடும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்