Sat ,Feb 24, 2024

சென்செக்ஸ் 73,142.80
-15.44sensex(-0.02%)
நிஃப்டி22,212.70
-4.75sensex(-0.02%)
USD
81.57
Exclusive

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சமந்தா, நயன்தாரா, ஸ்ருதி, ஆலியா! சிலருக்கு மட்டும் மரணம் ஏன்?

UDHAYA KUMAR May 18, 2022 & 10:40 [IST]
பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சமந்தா, நயன்தாரா, ஸ்ருதி, ஆலியா! சிலருக்கு மட்டும் மரணம் ஏன்?Representative Image.

கவனக்குறைவு, அலட்சியம்.... இந்த இரண்டும்தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும்போது நிகழும் மரணங்களுக்கு முக்கிய காரணமாக அமையும். முகத்திலிருக்கும் கொழுப்பை குறைக்க கன்னட சீரியல் நடிகை ஒருவர் செய்துகொண்ட பிளாஸ்டிக் சர்ஜரி அவரது உயிரையே குடித்துவிட்டது. அவருக்கு வயது 21. ஆனாலும் பெரிய நடிகைகள் இதுபோல சர்ஜரி செய்துகொண்டு சினி உலகில் கோலோச்சி இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பானதாக இருந்த பிளாஸ்டிக் சர்ஜரி, ஒரு சிலருக்கு ஏன் எமனாக அமைந்துவிடுகிறது. வாருங்கள் தெரிந்து கொள்வோம்

கன்னட நடிகை சேத்தனா

கன்னட மொழியில் சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை சேத்தனா ராஜ். இவர் நேற்று காலமானார். இவரது மரணத்துக்கு காரணம் ஒரு சர்ஜரி. முகத்தை அழகாக மாற்றும் முயற்சியில் தோல்வியுற்று மரணித்துள்ளார் சேத்தனா. 

முகத்தில் அதிக கொழுப்பு இருப்பதாக கருதிய சேத்தனா, தனியார் மருத்துமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனைப் பெற்று, அவரின் முகத்திலிருக்கும் கொழுப்பை அகற்ற சர்ஜரி ஒன்றுக்கு திட்டமிட்டுள்ளனர். அதன்படி குறிப்பிட்ட நேரத்துக்கு அப்பாய்ண்மென்ட்டும் கொடுத்து வரவழைத்துள்ளனர். இவர் மருத்துவமனை சென்ற விசயம் சேத்தனாவின் அம்மாவுக்கே தெரியாதாம். இப்படி ஒரு சோகமான விசயத்தை கேள்விப்பட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

இவர் மட்டுமல்ல உலகம் முழுக்க பல பிரபலங்கள் இதுபோன்ற சர்ஜரிக்களை மேற்கொண்டு அதனால் கடுமையான பாதிப்புகளையும் அடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். 

மரினா லெபேடேவா | marina lebedeva

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 31 வயதான மாடல் மரினா லெபேடேவா, தனது மூக்கை அழகாக்க ஆசைப்பட்டுள்ளார். அதற்காக கிட்டத்தட்ட 4 ஆயிரம் பவுண்ட் பணம் செலவு செய்து, பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டுள்ளார்.  ரைனோபிளாஸ்டி எனும் அறுவை சிகிச்சை கடைசியில் அவருக்கே எமனானது.  

ஜோஸ்லின் கேனோ | Joselyn Cano

29 வயதான மாடல் அழகி ஜோஸ்லின் கேனோ, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார். இவரது மரணத்துக்கு காரணம் அவர் செய்துகொண்ட சர்ஜரி. பட் லிஃப்ட் எனப்படும் அழகு சிகிச்சை மேற்கொண்ட இவர் கடைசியில் மரணத்தை தழுவினார். 

மற்றொரு மாடல்

மற்றொரு மாடல் அழகியான 23 வயது இளம்பெண், அக்குளில் வியர்வை வரக்கூடாது என்பதற்காக ஒரு ஸ்கின்பைல் க்ளினிக்கில் ஏற்பட்ட குளறுபடியில் உயிரிழந்தார். 

ரைஸா முக வீக்கம்

காஸ்மடிக் சிகிச்சை செய்துகொண்ட ரைஸா வில்சன் கூட கடந்த ஆண்டு இப்படி ஒரு பிரச்னையை சந்தித்தார்.  தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டவரின் முகம் வீங்கி, ஏடாகூடமாக, மருத்துவருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். பல கட்ட சிகிச்சைகளுக்குப் பின்தான் மீண்டும் பழைய படி முகம் வந்தது. 

தமிழ் நடிகைகள்

சமந்தா, நயன்தாரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் அனைவருமே காஸ்மடிக் சிகிச்சைகள் செய்துள்ளனர். பாதுகாப்பான சிகிச்சைகள் என்பதாலும் அதற்கான உரிய செலவை செய்து, தரமான மருத்துவமனைகளில் செய்துகொள்ளவேண்டும். அப்படி பார்த்து பார்த்து செய்யும்போது பல பிரச்னைகள். உஷார் மக்களே.

KEYWORDS:
plastic surgery death celebrity,
goals plastic surgery death,
hz plastic surgery deaths,
dr boucree goals plastic surgery death,
plastic surgery death statistics 2021,
plastic surgery complaints,
what is a plastic surgeon,
plastic surgery travel,


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்