Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

thalapathy 68 director தளபதி 67, 68, 69, 70, 71, 72 இயக்குநர்கள் பட்டியல்! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தளபதி விஜய்!

UDHAYA KUMAR May 17, 2022 & 12:00 [IST]
thalapathy 68 director தளபதி 67, 68, 69, 70, 71, 72 இயக்குநர்கள் பட்டியல்! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தளபதி விஜய்!Representative Image.

thalapathy 67 director,  movie name, cast, heroine name, music director, update | thalapathy 68 director,  movie name, cast, heroine name, music director, update | thalapathy 69 director,  movie name, cast, heroine name, music director, update | thalapathy 70 director,  movie name, cast, heroine name, music director, update | thalapathy 71 director,  movie name, cast, heroine name, music director, update | thalapathy 72 director,  movie name, cast, heroine name, music director, update

 

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தளபதி 67, 68, 69, 70, 71, 72 என அடுத்தடுத்து விஜய் யாருடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என அப்டேட்கள் தொடர்ந்து வரிசைக்கட்டி நிற்கின்றன. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம், தளபதி விஜய்யின் 65வது படமாகும். விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக சரியாக போகவில்லை என்றாலும், கலெக்ஷன் மாஸாக அமைந்தது. இதனால் வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான், தெலுங்கு பக்கம் இருந்து அடுத்த இயக்குநரைத் தேர்ந்தெடுத்துள்ளார் விஜய். 

 

வம்சியுடன் இணைந்த தளபதி |  Thalapathy 66 director, movie name, cast, heroine name, music director, update

தளபதி 66 என அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் முதல் கட்டமாக நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் பாடல் காட்சி மற்றும் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.  தளபதி 66 படத்தை வம்சி இயக்குகிறார். இவர் ஏற்கனவே தோழா எனும் படத்தை கார்த்தியை வைத்து எடுத்து வெற்றி கொடுத்தவர். தளபதி விஜய் ஜோடியாக, ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். 

தமன் இசையில் மொத்தம் 6 பாடல்கள் படத்தில் இடம்பெறுகின்றன. இதில் 3 பாடல்கள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் மிச்சமுள்ள பாடல்களையும் முடித்து கையில் கொடுத்துவிடுவாராம் தமன். இப்படியாக தளபதி 66 திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 

 

மீண்டும் லோகேஷ் |  Thalapathy 67 director, movie name, cast, heroine name, music director, update

பீஸ்ட் படத்துக்கு முன்னர் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இவரது ஒர்க்கிங் ஸ்டைல் மிகவும் பிடித்துவிட்டதால் அடுத்தடுத்து இரண்டு, மூன்று படங்கள் நிச்சயமாக இவருடன் விஜய் பணிபுரிவார் என அப்போதே பேசப்பட்டது. இந்நிலையில்தான், மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். வம்சி படத்தை சீக்கிரம் முடிங்க, நாங்க லோகேஷ் படத்த பாக்கணும்னு இப்பவே விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கத் துவங்கிவிட்டனர். 

விஜய் 67 படத்தில் விக்ரம் மாதிரியான சூப்பர் கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், இந்த படமும் விக்ரம் மாதிரியான எதிர்பார்ப்பை பெறும் என தகவல் வெளியாகியுள்ளன. 

 

அண்ணனுக்கு நான் தான் செய்வேன் |  Thalapathy 68 director, movie name, cast, heroine name, music director, update

விஜய் ரசிகர்களே மீண்டும் இந்த காம்போ அமையாதா என வேண்டி விரும்பி கேட்கும் ஒரு படம் என்றால் அது அட்லியுடன் நடிக்கவிருக்கும் படம்தான். ஷாருக்கான் படத்தைத் தொடர்ந்து அட்லி, விஜய் படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு கதையைத் தான் அட்லீ விஜய்யிடம் சொல்லி ஓகே வாங்கியிருக்கிறாராம். 

அட்லி விஜய் காம்போ எப்படி பெஸ்ட்டோ அதுபோலவே இந்த படத்தில் மீண்டும் சமந்தாவை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைப்பது எனவும் யோசித்து வருகிறார்களாம். ஆனால் இந்த படம் எப்போது துவங்கும் என தெரியாமல் கால்ஷீட் கேட்பது எப்படி முறையாகும் என காத்திருக்கிறார்கள். 

 

தளபதி 69  |  Thalapathy 69 director, movie name, cast, heroine name, music director, update

எப்போது இந்த காம்போ வரும், எப்போ இவர்கள் இருவரும் இணைவார்கள் என கோலிவுட்டே எதிர்பார்த்து காத்திருக்கிறது. வெற்றிமாறன் - விஜய் காம்போதான் அது. விஜய் ரசிகர்கள் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக இவர்கள் எப்போது இணைவார்கள் என கேட்டும், சில வதந்திகளைப் பரப்பியும் காத்திருக்கின்றனர். 

வெற்றிமாறன் - விஜய் காம்போவில் ஆடுகளம், அசுரன் மாதிரியான ஒரு படைப்பு வெளிப்படும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த காம்போ விரைவில் இணைய இருக்கிறது. அட்லி படத்தைத் தொடர்ந்து அல்லது அதற்கு முன்னதாக இவர்கள் படம் எடுப்பது உறுதியாகியுள்ளது. வெற்றிமாறன் படம் முதலில் வந்தால் இது தளபதி 68 ஆக வெளிவரும். இல்லையென்றால் இது தளபதி 69ஆக எடுக்கப்படும். 

 

தளபதி 70  |  Thalapathy 70 director, movie name, cast, heroine name, music director, update 

வம்சி, லோகேஷ், அட்லி, வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து படங்கள் அடுத்தடுத்து வந்த பின்னர், கிட்டத்தட்ட 2025ம் ஆண்டு தளபதி 70 உருவாகும் எனத் தெரிகிறது. இந்த படத்தில் யாருடன் இணையப் போகிறார் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை என்றாலும், சில யூகங்களின் அடிப்படையில், மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இந்தமுறை துப்பாக்கி 2 படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.  

அட்லி எடுக்கும் படம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை இது துப்பாக்கி 2 வாக இருக்கும் பட்சத்தில் இந்த படத்தின் பெயர் நிச்சயமாக வேறு பெயராகவே இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

 

தளபதி 71 |  Thalapathy 71 director, movie name, cast, heroine name, music director, update

விஷ்ணு வர்தனுடன் இணைந்து விஜய் படம் செய்ய வேண்டும் என்பதும் விஜய் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை. பில்லா படம் வெளியானதிலிருந்து இது பற்றி விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர். விஷ்ணு வர்தனும் தளபதி விஜய்யும் ஏற்கனவே சந்தித்து திட்டம் குறித்து பேசியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் ஒருவேளை இவர்களது இணைப்பு உறுதி செய்யப்பட்டால், அது தளபதி 71 படமாக அமையும். 

 

தளபதி 72 |  Thalapathy 72 director, movie name, cast, heroine name, music director, update

நண்பன் படத்துக்குப் பிறகு ஷங்கர் - விஜய் காம்பினேஷனில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்த முறை ஷங்கர் ஒரு பிரம்மாண்டமான ஸ்கிரிப்டில் விஜய்யை நடிக்க வைக்க காத்திருக்கிறாராம். ஏற்கனவே ஸ்க்ரிப்ட் வேலைகள் முடித்து வைத்திருப்பதாகவும், விஜய் சம்மதித்தால் அந்த படத்தில் நிச்சயம் இணைவார்கள் என கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக தாமதமாகும் என கூறப்படுகிறது. 

தளபதி விஜய்யின் பீக் என்பது அடுத்த 5 ஆண்டுகளாகத்தான் இருக்கும் என்பது எங்கள் கணிப்பு. இந்த காலக்கட்டத்தில் லோகேஷ், அட்லீ, வெற்றிமாறன், முருகதாஸ், விஷ்ணுவர்தன், ஷங்கர் என டாப் வாண்டட் இயக்குநர்களின் படத்தில் அடுத்தடுத்து நடிக்கிறார் விஜய். இவை தவிர மற்ற இளம் இயக்குநர்களும் கதைகளுடன் விஜய் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்