Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டைரி படம் எப்படி இருக்கு?

UDHAYAKUMAR August 26, 2022 & 14:00 [IST]
டைரி படம் எப்படி இருக்கு?Representative Image.

படம் - டைரி

நடிப்பு - அருள்நிதி

இயக்கம் - இன்னாசி பாண்டியன்

குறியீடு - ஓகே தான்

வகை - ஹாரர் த்ரில்லர் 

கதைச் சுருக்கம்

16 வருடங்களுக்கு முன்னர் நடந்த குற்ற வழக்கை தனது முதல் வழக்காக விசாரிக்கும் எஸ்ஐ அருள்நிதிக்கு அடுத்தடுத்து பல ஷாக்கிங் தகவல்கள் தெரிய வருகின்றன.  அதற்கு ஒரு முக்கிய காரணமாக அருள்நிதியே இருப்பதாக காட்டப்படுகிறது. அந்த வழக்கை விசாரித்து தீர்க்கும்போது அதற்கான சம்பந்தங்கள் தெரிய வருகிறது.

எப்படி இருக்கு?

உண்மையைச் சொல்லவேண்டுமானால் படம் சுமார் வகைதான். இதற்கு முன்னர் வெளியான தேஜாவு படமே பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.  ஆனால் கதை அளவில் டைரி நல்ல படம்தான்.  டீசன்ட்டாக அட்டம்ட் செய்திருக்கிறார்கள். 

முதல் 45 நிமிடங்கள் நமக்கான படம்தான் என்று நிமிர வைத்தாலும் அடுத்தடுத்து பழைய பார்முலாவையே அரைக்கிறார்களோ இதுவரை நாம் நம்பியது எல்லாம் பொய்யோ என்பதுபோல உணரத் தூண்டுகிறது. 

முழுக்க முழுக்க பேருந்து காட்சிகள் போரிங்காக இருக்கிறது. அதுதான் படத்தின் முக்கால்வாசி கதையாக நிமிர்வதுதான் படத்தின் தோல்விக்கான காரணமாக அமையும். ஏனென்றால் படத்தின் கதைக்கருவுக்கும் இந்த பேருந்து எபிசோடுக்கும் சம்பந்தமே இல்லாதது போன்று எந்தவித பில்டப்பும் இல்லை. இசையாவது காப்பாற்றியிருக்கலாம் என்றால் சாம் சிஎஸ், சான் ரோல்டன், ஜிப்ரான் என யாரும் இல்லையே என்கிற வருத்தம்தான். 

வீக்கெண்ட் - கேர்ள் பிரண்டுக்கும் கமிட்மெண்ட்ஸ் இல்லை நீங்களும் வெட்டியாய் இருக்கிறீர்கள் என்றால் தியேட்டருக்கு சென்று பார்க்கலாம். நண்பர்களோடு சென்றாலும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் படத்தை மிகவும் எதிர்பார்த்து தியேட்டருக்கு செல்லவேண்டாம். எனினும் லைகர் படத்துக்கு அடம்பிடித்து போவதற்கு பதில் இந்த படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்