Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

செம்பி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்! | sembi movie review

UDHAYA KUMAR Updated:
செம்பி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்! | sembi movie reviewRepresentative Image.

பிரபு சாலமன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் செம்பி. இதில் கோவை சரளா, அஸ்வின்குமார், தம்பி ராமையா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர் ரவீந்திரன், அஜ்மல் கான், ரியா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். 

செம்பி ஓடிடி ரிலீஸ் தேதி, ஓடிடி தளம் வெளியீட்டு நேரம் மற்றும் பல தகவல்கள்

Sembi OTT Release Date, Where & When to Watch? | Covai sarala starring Sembi OTT Release Date | Sembi OTT Release Date and Time | Covai sarala starring Sembi Tamil Movie OTT Release Date, Watch Live here | Sembi Ott Release | Covai sarala starring Sembi Tamil Movie OTT Release Date | Sembi ott release date and time telugu | Sembi release date in amazon prime time| Sembi ott release date Tamil

நடிகர் Covai sarala நடிப்பில் பிரபு சாலமன் Prabu Solomon இயக்கி கடந்த  30 Dec, 2022 தேதி வெளிவந்த  Sembi OTT release date செம்பி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது.  செம்பி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை மற்றும் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமை  digital streaming and satellite release உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம்.  AR Entertainment, Trident Arts நிறுவனம் சார்பில்  தொடங்கப்பட்ட இந்த படத்தில் Ashwin Kumar, Kovai Sarala, Thambi Ramaiah உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Nivas K Prasanna இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது. 

Sembi Trailer

Sembi OTT Release Date & Digital Streaming Rights

Cast & Crew

Movie :    Sembi (2022)
Genre :Family  / Drama
Language :    Tamil
Release Date :     30 Dec, 2022
Director :    Prabu Solomon
Producer :     ProducerName
Screenplay :    Prabu Solomon
Story    : Prabu Solomon
Cast    : Ashwin Kumar, Kovai Sarala, Thambi Ramaiah
Music    : Nivas K Prasanna
DOP    : Buvan
Editor    : M Jeevan
Production Company : AR Entertainment, Trident Arts

கதைச் சுருக்கம் 

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்து வரும் பாட்டி வீரத்தாய், அவளது 10 வயது பேத்தி செம்பி.  மூன்று கொடுங்கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பேத்தியை செந்நாய் கடித்துவிட்டதென எண்ணி மருத்துமனையில் சேர்க்கிறாள் பாட்டி. மருத்துவர்களின் மூலம் உண்மை தெரியவரவே கொடுங்கயவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என மிக கடுமையாக போராடுகிறாள் பாட்டி. 

சட்டரீதியாக அணுக முயற்சிக்கும் பாட்டிக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. கொடூரன்களைக் கண்டறிந்தாரா? அவர்களுக்கு தண்டனைக் கிடைத்ததா? இப்படி பல விசயங்களை காட்டியுள்ளார் பிரபு சாலமன். 
 

செம்பி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்! | sembi movie reviewRepresentative Image

விமர்சனம்

பேருந்துக்குள் அதிக நேரம் பயணிக்கிறது செம்பி. இந்த காட்சியை எழுதி படமாக்கிருக்கும் விதமும் பாராட்டப்பட வேண்டும். நிச்சயம் இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இந்த பாராட்டுக்கள் போய் சேரவேண்டும். 

தம்பி ராமையாவின் பேருந்தில் பல தரப்பட்ட மனிதர்கள் பயணிக்கிறார்கள். அவர்களில் செம்பிக்காக சிலர் குரல் கொடுக்கிறார்கள். சிலர் போராட்டங்களை எதிர்த்து பேசும் வகையில் நடந்துகொள்கின்றனர்.  பேத்திக்கு நடந்த கொடுமையை கேவலமாக பேசும் அந்த நபர்களைப் பார்த்தாலே நமக்கு மிகக் கடுமையான கோபம் வருகிறது. மைனா படத்தில் போலீஸ்காரன் மனைவியாக வருபவர் போன்ற எரிச்சல் இங்கும் இருக்கிறது. அழுகை , துக்கம், மன இறுக்கம் என செம்பியுடன் பயணித்துவிட்டு திரும்பி வந்தோம். 

பிரபு சாலமனுக்கே உரித்தான கிளைமேக்ஸ் காட்சிகள் இன்றைய தலைமுறை 2.1K கிட்களை கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் 90ஸ் கிட்ஸ் நிச்சயம் இதனை கொண்டாடுவார்கள். 

இந்த படத்துக்கு பிறகு போக்ஸோ சட்டம் குறித்து இதுவரை தெரியாதவர்களுக்கும் தெரிந்துவிடும். அந்த அளவுக்கு அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் குற்றங்கள் நடந்தால் வெளியில் சொல்லாமல் தற்கொலை செய்வது இந்த படத்தைப் பார்த்த பிறகு குறையும் என்றே தோன்றுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்