Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிவாஜி படத்துக்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா? என்ன காரணம் தெரியுமா?

UDHAYA KUMAR June 20, 2022 & 13:45 [IST]
சிவாஜி படத்துக்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா? என்ன காரணம் தெரியுமா?Representative Image.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்றால் அது ரஜினியும் கமலும்தான். அன்றிலிருந்து இன்று வரை தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமா உலகையே ஆட்டிப்படைத்து வருகின்றனர் இருவரும். கமல்ஹாசனுக்கு பெரிய அளவில் சம்பள உயர்வு இல்லை, அவர் சொந்த படம் தயாரிக்கிறார் என்பதால் இந்த போட்டிகளில் அவர் பங்கேற்பதில்லை. அதேநேரம் ரஜினியையும் ஓவர் டேக் செய்து போட்டியிடுபவர் நம்ம தளபதி விஜய். 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சமீபத்திய படங்கள் பெரும்பாலும் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அநாயமாக 100 கோடி அடித்துவிடுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் வசூல் வடை சுட ஏதுவாக இருக்கிறது 300, 400 கோடி என இஷ்டத்துக்கு எழுதி வருகின்றனர். உண்மையில் ரஜினிக்கு அவ்வளவு சம்பளம் எல்லாம் இல்லை. அவர் நியாயமான சம்பளமே வாங்குகிறார். அதற்கு ஒரு உதாரணமும் கூட உண்டு. 

சமீபத்தில் சிவாஜி படத்தின் 15 ஆண்டுகள் நிறைவு விழா டிவிட்டரில் பலராலும் கொண்டாடப்பட்டது. ஷங்கரும் ரஜினியை தனது மகளுடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில்தான், ரஜினி சிவாஜி படத்துக்கு வாங்கிய சம்பள விவரம் வெளிவந்துள்ளது. 

சிவாஜி படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் 18 கோடி ரூபாயாம். அதிலும் அட்வான்ஸாக 1000 ரூ மட்டுமே பெற்றுக்கொண்டு நடித்துள்ளார். பேசப்பட்ட 18 கோடி ரூபாயிலும் சுமார் 3 கோடி ரூபாயை தயாரிப்பாளருக்கே விட்டுக் கொடுத்துள்ளார் ரஜினி. பணப் பிரச்னையால் படம் ரிலீஸ் தள்ளிப் போய்விடக்கூடாது என்பதால்தான் இப்படிச் செய்தார் என்கிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்