Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சன்னிலியோனுக்கு பால்கோவா ஊட்டி ப்ரோபோஸ்… GP முத்துவின் அட்டகாசம்..!

Gowthami Subramani November 03, 2022 & 12:05 [IST]
சன்னிலியோனுக்கு பால்கோவா ஊட்டி ப்ரோபோஸ்… GP முத்துவின் அட்டகாசம்..!Representative Image.

சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்பட விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சன்னி லியோன் தமிழ் பாரம்பரிய உடையான சேலை அணிந்து விழாவில் பங்கேற்றார். இதில், ஜிபி முத்து உள்ளிட்ட பல திரைப்பட நடிகர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த விழாவில், சன்னி லியோனிடம் இந்த கூட்டத்தில் உள்ள பிரபலங்களில் யாரை ரொம்ப பிடிக்கும் எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதில், ஜிபி முத்துவை அறிமுகம் செய்து அவர் எழுந்த போது மேடை முழுவதும் ஆரவாரத்துடன் ரசிகர்கள் கைதட்டினர். அவர் எழுந்து நின்ற அதே சமயத்தில், சன்னி லியோன் ஜிபி முத்துவைப் புகழ்ந்தார். அது மட்டுமின்றி அவரை மிகவும் பிடிக்கும் எனவும் ஆங்கிலத்தில் கூறினார். இது ஜிபி முத்துவுக்குப் புரியாமல் இருந்தது. உடனே, விஜே அர்ச்சனா இவரிடம் சன்னி லியோன் பேசியதைக் கூறினார்.

ஜிபி முத்துவிற்கு அளவு கடந்த சந்தோஷம். இவரும் சன்னிலியோனுடன் ஒன்று சொல்ல வேண்டும் என கூறினார். இதற்கு அர்ச்சனா தான் டிரான்ஸ்லேட்டர். அர்ச்சனாவும் ஜிபிமுத்துவை மேடைக்கு வரச்சொல்லி பேசினர்.

இதில், ஜிபி முத்து சன்னி லியோனிடம் கூறியதாவது, “உங்களைப் பாத்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்கு.. உங்க போட்டோவ பாத்து நான் ஸ்வீட் குடுத்தேன். தமிழ்நாட்டுல பால்கோவா தான் பெரிய விஷயம். அத உங்களுக்கு தான் குடுத்தேன். நீங்க பால்கோவா மாறி ரொம்ப அழகா இருக்கீங்க.” என்றார். இது இவர் கூறினாரோ இல்லையோ உடனே ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் எழுப்பினர்.

இது எனக்காக இல்ல. ரசிகர்களைக் காட்டில் உங்க எல்லோருக்காகவும், நான் சன்னிலியோனுக்கு பால்கோவா கொடுக்கறன். இது பேசிட்டு இருக்கும் போது நடிகர் சதீஸ் மேடையில் ஏறி கலாய்த்தார்.

பிறகு, ஒன்றாக சேர்ந்து மேடையில் நடனமாடினர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வரதுக்குக்கான காரணம் சன்னிலியோனுக்காகத் தான் என்று சதீஷ் மேடையிலேயே கலாய்த்து விட்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்