Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மணிரத்னம் - கமல்ஹாசன் படத்தில் சூப்பர் ஸ்டார்?

UDHAYA KUMAR Updated:
மணிரத்னம் - கமல்ஹாசன் படத்தில் சூப்பர் ஸ்டார்?Representative Image.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் KH234 திரைப்படம் வரும் மே மாதம் துவங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதில் சூப்பர் அப்டேட்டாக சூப்பர் ஸ்டார் ஒருவரும் படத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் இதுவரையுள்ள அனைத்து படங்களின் சாதனைகளையும் அடித்து நொறுக்கி வியாபாரத்தில் பின்னி பெடலெடுத்தது. இதன்மூலம் கமல்ஹாசன் தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்தார். இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் இந்தியன் 2 திரைப்படமும் இதனைவிட மிகப் பெரிய வெற்றியை ருசிக்கும் என கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படம் நிச்சயம் மாபெரும் வெற்றியடையும் என பரவலாக பேசி வருகின்றனர். இதற்கு காரணம் இந்த படத்தின் கண்டென்ட் அனைவரையும் கணெக்ட் செய்யும் வகையில் அமையும் என்பதுதான். 

இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் அ.வினோத் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் இந்த படம் சற்று தாமதமாகும் என கூறப்பட்ட நிலையில், அப்போது அடுத்து பா.ரஞ்சித் படத்தில் இணைவார் என கூறப்பட்டது. ஆனால் பா.ரஞ்சித் இப்போது தங்கலான் படத்தில் மிகவும் பிஸியாக பணிபுரிந்து வருகிறார். செப்டம்பர் மாதம் வரையிலும் ஷூட்டிங் தொடரும் என்பதால் இந்த படமும் இப்போதைக்கு இல்லை என்கிறார்கள். 
 

மணிரத்னம் - கமல்ஹாசன் படத்தில் சூப்பர் ஸ்டார்?Representative Image

மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டார்!

இதனிடையே மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தின் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவு பெறும் எனவும் வரும் மே மாதம் முதல் கமல்ஹாசன் படத்தின் பணிகளைத் துவங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியன் 2 படமும் விரைவில் முடியும் என்பதால், கமல்ஹாசனை நேரடியாக இந்த படத்தில் பணிபுரிய அழைத்துள்ளார் மணிரத்னம். தனது மருமகனே வந்து அழைத்திருப்பதால் அவரது பேச்சை தட்டமுடியாமல் இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் படத்தில் சேர முடிவெடுத்துவிட்டாராம் கமல்ஹாசன்.  இந்த படத்தில் இன்னொரு அப்டேட்டும் இருக்கிறது. அது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க இருக்கிறாராம். அதுவும் பாதிக்கு மேல் படங்களில் அவரும் கமல்ஹாசனுடன் பயணிக்கிறாராம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்