Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹன்சிகாவுக்கு எத்தனை குழந்தைகள் தெரியுமா?

UDHAYA KUMAR Updated:
ஹன்சிகாவுக்கு எத்தனை குழந்தைகள் தெரியுமா?Representative Image.

நடிகை ஹன்சிகாவுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் முப்பத்தொன்று. ஆமாம். ஆதரவற்ற 31 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் நடிகை ஹன்சிகா. 

தமிழ் திரையுலகில் பப்ளி ஹீரோயின்களுக்கு எப்போதும் வரவேற்பு அதிகமாக இருக்கும். அந்த வகையில் தற்போது முன்னணி நாயகியாக இருந்தவர் ஹன்சிகா. ஆனால் இவரது மார்க்கெட் அப்படியே கீழே போய்விட்டது. ஆனால் இவரது மனதுக்கு இவர் மிக உயரத்தில் இருக்கிறார். காரணம் இவர் 31 குழந்தைகளைத் தனது சொந்த செலவில் பராமரித்து வருகிறாராம். இதனை ஒரு பேட்டியின் போது மனம் திறந்து பேசியுள்ளார். 

50 படங்கள் வரை நடித்துள்ள ஹன்சிகா,  இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் கிட்டத்தட்ட 12 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.  கடந்த டிசம்பர் மாதம் இவருக்கு சோஹைல் என்வருடன் திருமணம் நடந்து முடிந்தது. கணவருடன் ஜாலியாக தேனிலவு பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியுள்ளார் ஹன்சிகா. 

குறிப்பிட்ட சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது ஹன்சிகா இந்த உண்மையைத் தெரிவித்துள்ளார்.  நல்லது செய்தால் நமக்கு நல்லதே நடக்கும். பிறருக்கு நல்லது செய்யவேண்டும். இது என் அம்மா சொல்லிக்கொடுத்தது.  சினிமாவில் வளர்ந்த பிறகு ஆதரவற்ற குழந்தைகளைத் தத்து எடுக்கத் துவங்கினேன். இப்போது என்னிடம் 31 குழந்தைகள் இருக்கிறார்கள். கடவுளின் அருளால் அவர்களை என்னால் நன்றாக கவனித்துக் கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்