Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துரத்திக் கொண்டு சென்ற ஜீப்! அதிரடியாய் நுழைந்த ஹரி டீம்.. ஆர்ட்டிஸ்ட் புக் பண்றதுக்கு இப்படி அலப்பற பண்ண ஒரே கோஷ்டி நம்ம கோஷ்டிதான்!

UDHAYA KUMAR July 01, 2022 & 16:56 [IST]
 துரத்திக் கொண்டு சென்ற ஜீப்! அதிரடியாய் நுழைந்த ஹரி டீம்.. ஆர்ட்டிஸ்ட் புக் பண்றதுக்கு இப்படி அலப்பற பண்ண ஒரே கோஷ்டி நம்ம கோஷ்டிதான்!Representative Image.

ராமேஸ்வரத்தில் தங்களை ஏதேச்சையாக சந்தித்த பிரபலத்தையே யானை படத்துக்காக புக் செய்ய அதிரி புதிரி காட்சிகளை கண்முன்னே நிகழ்த்தி காட்டியுள்ளது இயக்குநர் ஹரி டீம். இந்த சுவாரஸ்ய கதையை அவரே யூடியூப் சேனல் இண்டர்வியூவில் பகிர்ந்துகொண்டுள்ளார். 

அதிரடி, பரபரப்பு, சண்டை, வேகம் என பெயர் பெற்றவர் இயக்குநர் ஹரி. இவரின் சாமி, சிங்கம் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி வெற்றிகளைக் குவித்தன. இதனால் ஹரிக்கு தமிழ் சினிமா இயக்குநர்களின் தனி இடம் உண்டு. 

இடையில் சாமி படத்தின் சீக்குவலை சொதப்பியதால் பல ஆண்டுகள் படம் இயக்காமல் காத்திருந்தார். சரியான கதையைக் கொண்டு சூர்யாவை சம்மதிக்க வைத்தவர், அருவா எனும் படத்தை இயக்க முன்வந்தார். ஆனால் அப்போதைய பிரச்னையில் படம் நிகழாமல் போய்விட்டது. 

தனது மைத்துனரான அருண் விஜய்யை வைத்து யானை திரைப்படத்தை இயக்கி இன்று ரிலீசும் செய்துவிட்டார்கள். நல்ல வரவேற்பை பெற்று பேசப்பட்டு வரும் இந்த படம் குறித்த புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வரும் ஹரி சில சுவாரஸ்யமான விசயங்களை பேட்டியில் பகிர்ந்தார். 

யானை படத்தின் ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் நடைபெற்று வந்துள்ளது. இன்றே கடைசிநாள் எனும்போது அடுத்த நாள் காரைக்குடியில் படப்பிடிப்பு நடத்தவேண்டும். அந்த காட்சிக்கு முக்கியமான ஒரு நபர் தேவை. ஆனால் அந்த கதாபாத்திரத்துக்கான நபரை இதுவரை ஒப்பந்தம் செய்யவே இல்லையாம். அப்போது ஏதேச்சையாக அங்கு வந்த இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் இந்த பாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என ஹரியின் உதவி இயக்குநர்கள் கூற, அதற்குள் புறப்பட்டு சென்றுவிட்ட கங்கை அமரனை துரத்திச் சென்றுள்ளது ஜீப். 

அவரது அறைக்கே சென்று அவரை பேசி சம்மதிக்க வைத்து அடுத்த நாள் காரைக்குடிக்கு முதல் ஆளாக வரவழைத்து ஷூட்டிங் நடத்தியுள்ளனர். 

அப்பப்பா ஹரி படத்தில்தான் வேகம் என்றால் இதுவும் வேகவேகமாக பரபரப்பாக நடந்தேறியுள்ளதே!
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்