Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நா முத்துக்குமாரின் உணர்ச்சி பொங்கும் வரிகளில் டாப் 10 பாடல்கள் இதோ! உங்களுக்கு பிடித்ததை பதிவு செய்யுங்கள்...!

UDHAYAKUMAR August 14, 2022 & 11:25 [IST]
நா முத்துக்குமாரின் உணர்ச்சி பொங்கும் வரிகளில் டாப் 10 பாடல்கள் இதோ! உங்களுக்கு பிடித்ததை பதிவு செய்யுங்கள்...!Representative Image.

ஒரு கல் ஒரு கண்ணாடி - சிவா மனசுல சக்தி

உன் முகம் பார்த்தே
நான் எழுவேன் உன் குரல்
கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்

இது முத்துக்குமார் எழுதிய வரிகள் மட்டுமல்ல, முத்துக்குமாரை நேசிக்கும் பலரின் எண்ண ஓட்டங்களும்தான். 

உன் உதட்டுக்குள்
இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால்
தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மௌனத்தில் இருக்கும்
என்ன வலிகள் காதல் என்றால்
மெல்ல சாதல் என்று சொல்ல

தமிழின் மேல் காதல் வைத்துள்ளவர்கள், நாமுவின் வரிகளை காதலிக்காமல் போய்விடுவார்களா என்ன? 

சிவா மனசுல சக்தி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி பாடலின் வரிகளில் காதலிக்காதவர்கள் கூட காதலில் லயித்துபோய் விழுவார்கள். அந்த அளவுக்கு அழுத்தமான வரிகளை எழுதியிருக்கிறார் நாமு. 

கனா காணும் காலங்கள் - 7ஜு ரெயின்போ காலணி

நனையாத
காலுக்கெல்லாம்
கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேர் என்றால்
நட்பு என்று பேரில்லை

காலுக்கும் கடலுக்கும் உறவு இல்லாமல் இருக்கலாம் ஆனால் தமிழுக்கும் நாமுவிற்கும் இருக்கும் உறவு மிக நெருக்கமானது. தன்னைப் பற்றி பெரிய அளவில் யோசிக்காமல் தமிழை அதிக அளவில் நேசித்தவரின் கவிதைகள் மக்களுக்குத்தான் அதிக நெருக்கம். 


தாயோடும் சிறு
தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது
கிடையாதே தாவி வந்து
சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி
இல்லையே

இதுபோன்று இன்னும் பல பாடல்களும், அழகிய அர்த்தங்களும் இருக்கின்றன. மற்ற 8 பாடல்களையும் அடுத்தடுத்து காண்போம். 

நெஞ்சோடு கலந்திடு - காதல் கொண்டேன்

முக மூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றெங்கு என்னது
நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா

என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை

வெயிலோடு விளையாடி - வெயில்

வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்

அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்

வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன்வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்

ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்

தொப்புள்கொடியைப் போலத்தான்
இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - அங்காடித் தெரு

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை


பறவையே எங்கு இருக்கிறாய் - கற்றது தமிழ்

ஏழை காதல் மலைகள்தனில்
தோன்றுகின்ற ஒரு நதியாகும்
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுதோ
இதோ இதோ இந்தப் பயணத்திலே
இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா


தெய்வங்கள் எல்லாம் - கேடி பில்லா கில்லாடி ரங்கா

என்னுயிர் அணுவில்
வரும் உன்னுயிர் அல்லவா.
மண்ணில் வந்த நான்
உன் நகல் அல்லவா.
காலங்கள் கண்ட பின்னே
உன்னை கண்டேன்

கண்டிப்பிலும் தண்டிப்பிலும்
கொதித்திடும் உன் முகம்.
காய்ச்சல் வந்து படுக்கையில்
துடிப்பதும் உன் முகம்.

அம்பாரியாய் ஏற்றிக்கொண்டு
அன்று சென்ற ஊர்வலம்.
தகப்பனின் அணைப்பிலே
கிடந்ததும் ஓர் சுகம்.

அழகே அழகே - சைவம்

இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும்
இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்
நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே
நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே
பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு
அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு

ஆனந்த யாழை - தங்கமீன்கள்

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

ஒரு நாளில் வாழ்க்கை - புதுப்பேட்டை

போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்
தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்