Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பூஜையுடன் தொடங்கியுள்ளது இந்தியன் 2...! படப்பிடிப்பு எப்போது..?

UDHAYAKUMAR August 24, 2022 & 15:00 [IST]
பூஜையுடன் தொடங்கியுள்ளது இந்தியன் 2...! படப்பிடிப்பு எப்போது..?Representative Image.

பல பிரச்னைகளுக்குப் பிறகு மீண்டும் துவங்கியுள்ளது இந்தியன் 2 திரைப்படம். படத்துக்கு இரண்டாவது முறையாக பூஜை போட்டு, துவங்கியுள்ளது படக்குழு. இதில் இயக்குநர் ஷங்கர் உட்பட படத்தில் பணிபுரியும் பலரும் கலந்து கொண்டுள்ளனர். படப்பிடிப்பு எப்போது துவங்கும் என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இன்றே படப்பிடிப்புக்கான பணிகள் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை, இயக்குநர் ஷங்கர் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கான படப்பிடிப்பில் இரண்டு வாரங்களில் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 

உதயநிதி ஸ்டாலின், லைகா, ஷங்கர், கமல்ஹாசன் ஆகியோருடன் அனிருத் இணையும் இந்த படத்தினை இந்திய அளவில் பலதரப்பட்ட ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கமல்ஹாசன் நடித்து விக்ரம் திரைப்படம் மெகா ஹிட் ஆனதைத் தொடர்ந்து இந்த படமும் வேற லெவலுக்கு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ரிலீஸை வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக டிசம்பர், ஜனவரிக்குள் ஷூட்டிங்கை முடித்துக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்