Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யோகிபாபுவுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் ! என்ன விசயம் தெரியுமா?

UDHAYA KUMAR Updated:
யோகிபாபுவுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் ! என்ன விசயம் தெரியுமா?Representative Image.

வடிவேலுவுக்கு பிறகு அந்த இடத்தை கொஞ்சம் நிரப்பி இருப்பவர் என்றால் அது யோகிபாபுதான். எந்த படமாக இருந்தாலும் அதில் யோகிபாபு இருக்கிறார். கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அதில் மிக முக்கியமானதாக மண்டேலா படத்தைக் கூறலாம். மிகவும் சுவாரஸ்யமானதாக உருவாகியிருந்த அந்த படத்தை இந்தியாவே கொண்டாடியது. 

மண்டேலா படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து யோகிபாபு இன்னும் பல மடங்கு புகழைத் தொட்டார். அடுத்தடுத்து திரைப்படங்கள் ஒப்பந்தமாகி பிஸியான நபராக இருக்கிறார். 

யோகிபாபுவுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட்தானாம். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்களும் வெளியாகும். இந்நிலையில்தான் இப்படி ஒரு விசயம் நடந்தது வெளியில் தெரிந்துள்ளது. 

யோகிபாபுவுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்த நடிகர் விஜய், அவருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்திருக்கிறார்.  இந்த பேட்டை எனக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஆக கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி எனக் கூறி இந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் யோகிபாபு. 

பீஸ்ட், பிகில், மெர்சல், சர்கார் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து விஜய்யுடன் நடித்த யோகிபாபு அடுத்து வரும் படங்களிலும் இருப்பார் என கூறப்படுகிறது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்