நடிகர் விஜய்யின் அடுத்த படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி வருகிறார். தோழா படத்தைத் தொடர்ந்து தமிழில் ஒரு படம் செய்வதால் அவர் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தளபதி விஜய்யை வைத்து என்ன செய்யப்போகிறார் என தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டர் ஒருவரைப் பார்த்து இணையதள ரசிகர்கள் தலைதெறித்து ஓடுகின்றனர்.
விஜய் நடிப்பில் கடைசியாக வந்த படம் பீஸ்ட். இந்த படத்துக்கு டான்ஸ் அமைத்திருந்தவர் ஜானி மாஸ்டர். இவர்தான் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன், கார்த்தி நடிப்பில் விருமன் படங்களுக்கும் கொரியோகிராஃபர். இந்த படங்களில் மெகா ஹிட் ஆன பாடல்களுக்கு இவர் அமைத்த டான்ஸ் ஸ்டெப்கள்தான் ரசிகர்களை ஓட வைத்துள்ளது.
ஜானி மாஸ்டர் அமைத்து கொடுத்த பாடல்கள் அனைத்துமே ஹிட்தான். ஆனாலும் குறிப்பிட்ட ஸ்டெப்கள் இணையதளங்களில் கலாய்க்கப்பட்டு வருகின்றன. இதுதான் அவர்களின் பயம். இப்போது ஜானி மாஸ்டர்தான் வாரிசு படத்துக்கும் டான்ஸ் மாஸ்டர் என தெரியவந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் பீதியில் இருக்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…