Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜெயிலரும் காப்பியா? என்னங்க போங்க...!

UDHAYAKUMAR August 23, 2022 & 14:59 [IST]
ஜெயிலரும் காப்பியா? என்னங்க போங்க...!Representative Image.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தை நேற்று பிறந்த குழந்தையிலிருந்து இளைஞர்கள் வரை கழுவி ஊற்றிய நிலையில், அதுபோல் சீரியலில் நடிக்க வேண்டாம் சீரியஸாக
காமெடி ஸ்கிரிப்ட் பண்ணலாம் என முடிவு எடுத்து, அந்த பொறுப்பை நெல்சனிடம் கொடுத்தது சன்பிக்சர்ஸ் நிறுவனம். 

மெகா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட அண்ணாத்தே, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட்  படங்கள் மாபெரும் தோல்வியடைந்த நிலையில், இதெல்லாம் எங்கே வெற்றி பெறப்போகிறது என
சன்பிக்சர்ஸ் நிறுவனமே கைவிட்ட படமான திருச்சிற்றம்பலம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. 

நல்ல கதையில் நல்ல நாயகன் நடித்தால் யார் இயக்கினாலும் வெற்றி தருவார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டு நம்ம திருச்சிற்றம்பலம்தான். கமல்ஹாசனைப் போலவே தன்னைத்
தாழ்த்திக்கொண்டாலும் கதை நன்றாக வரவேண்டும் என நித்யா மேனனுக்கு கொஞ்சம் வெயிட்டேஜ் அதிகமான சீன்களைக் கொண்ட இந்த படத்தை ஒப்புக் கொண்டு நடித்த தனுஷின்
மனப்பாங்கு அவரது முன்னாள் மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வருமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். 

இந்நிலையில்தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படமான ஜெயிலர் பூஜையுடன் படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டது படக்குழு. ஆனால் இதே பெயரில் இதற்கு முன் எத்தனை
படங்கள் வந்திருக்கின்றன தெரியுமா என பட்டியலிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். 

1958ம் ஆண்டு ஹிந்தியில் இதே பெயரில் ஒரு படம் வெளியாகியிருக்கிறது. சோரப் மோடி, கீதா பாலி உள்ளிட்டோர் நடித்த அந்த படம் அந்த காலத்தின் மெகா ஹிட் திரைப்படமாக அமைந்தது.
ஏனென்றால் இந்த கதை ஏற்கனவே 1938ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு படத்தின் ரீமேக்தான். அந்த படத்தையும் இயக்கியவர் நம்ம சோரப் மோடி தான். 

ஜெய்லர் தலைப்பில் 1938 மற்றும் 1958 வருடங்களில் இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. 

தயான் ஸ்ரீநிவாசன் நடிக்கும் ஒரு படத்துக்கும் ஜெய்லர் என்றே தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்