Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Johnny Amber Case: மனைவி கொடுக்கும் நஷ்ட ஈடு - ஜானி டெப் எடுத்த முடிவு!

Abhinesh A.R Updated:
Johnny Amber Case: மனைவி கொடுக்கும் நஷ்ட ஈடு - ஜானி டெப் எடுத்த முடிவு!Representative Image.

Johnny Depp Amber Heard Case: உலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஜானி டெப், பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைபடம் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். திரையில் தோன்றி பலரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்த ஜானியின் திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை.

ஜானி டெப் தனது நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என ஆம்பர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அவர் போட்ட வழக்கு, அவருக்கே திருப்பி அடித்தது. அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து ஜானி டெப் உடனான அனைத்து வழக்குகளையும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக வழங்கி முடித்துக் கொள்ளவுள்ளதாக ஆம்பர் ஹெர்ட் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், தற்போது ஆம்பர் தரும் பணத்தில் ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளர்.

ஆம்பர் ஹெர்ட் வழங்கவுள்ள ஒரு மில்லியன் டாலரை நடிகர் ஜானி டெப், 'மேக் ஏ பிலிம் பவுண்டேஷன்', 'தி பெயிண்டட் டர்ட்டில்','ரெட் பெதர்', 'டெடியரோ சோசைட்டி' மற்றும் 'அமசோனியா பண்ட் அலயன்ஸ்' போன்ற ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக கூறியுள்ளார்.

Johnny Amber Case: மனைவி கொடுக்கும் நஷ்ட ஈடு - ஜானி டெப் எடுத்த முடிவு!Representative Image

ஜானி - ஆம்பர் வழக்கு

ஜானி தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் முதலில் வழக்குத்தொடர்ந்தார். இதை எதிர்த்து தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஜானி டெப் எதிர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகளில் ஜானி டெப் நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி நீதிமன்றம் அவற்றை தள்ளுபடி செய்தது.

மேலும், அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக ரூ.78 கோடியும், அபராதமாக 38 கோடி ரூபாயும் என மொத்தம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன்) வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இந்த வழக்கு உலகளவில் பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்