Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

தளபதி 67ல் டில்லி... விஜய்யுடன் கைக்கோர்க்கும் கார்த்தி!

UDHAYA KUMAR Updated:
தளபதி 67ல் டில்லி... விஜய்யுடன் கைக்கோர்க்கும் கார்த்தி!Representative Image.

தளபதி விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் கைதி படத்தின் ஹீரோவான டில்லி கதாபாத்திரமும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

கோலிவுட் மட்டுமின்றி இந்தியாவே உற்று நோக்கும் இயக்குநராக மாறிவிட்டார் லோகேஷ் கனகராஜ். முதலில் கார்த்தி, பின் விஜய், அடுத்து கமல்ஹாசன் என இந்தியா முழுக்க பெரும் எதிர்பார்ப்புகளை எகிறச் செய்த படங்களை எடுத்து இப்போது அதை இரட்டிப்பு எதிர்பார்ப்பாக மாற்றியிருக்கிறார். காரணம் தளபதி 67 படம் LCUல் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்விக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் கிடைக்கவில்லை என்பதுதான். 

தளபதி 67 படத்தின் மூலக் கதையை கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கைதி படத்தின் முன்கதையுடன் இணைக்கும் வகையில் திட்டமிட்டிருக்கிறாராம் லோகேஷ். இதன்மூலம் அடுத்து இவர் இயக்கும் கைதி 2 படத்துக்கும் ஹைப் கிரியேட் பண்ண முடியும் என எதிர்பார்க்கிறார் போல. 

கைதி படத்தைத் தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்தார் லோகேஷ் கனகராஜ். இவரும் விஜய் ரசிகர்களின் விருப்பமான இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார். பின்னர் தனது குருவான கமல்ஹாசனை இயக்க வாய்ப்பு கிடைத்தும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தன்னுடைய பாணியிலேயே விக்ரமைக் கொடுத்தார். அதில் கைதி படத்தின் லிங்க் இருந்ததைக் கண்டு பலரும் உற்சாகமடைந்தனர். 

இதனால் அடுத்து வரும் தளபதி 67 படத்திலும் இதுபோன்ற எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர் ரசிகர்கள். எனினும் இதுகுறித்து எந்த வித அப்டேட்டும் இல்லாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்