Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

வாரிசு படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இது தான்! தெறிக்க விடும் மாஸ் சம்பவங்கள்.. | Varisu Movie Deleted Scenes

Gowthami Subramani Updated:
வாரிசு படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இது தான்! தெறிக்க விடும் மாஸ் சம்பவங்கள்.. | Varisu Movie Deleted ScenesRepresentative Image.

தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை அமேசான் பிரைம் வெளியிட்டுள்ளது.
 

வாரிசு படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இது தான்! தெறிக்க விடும் மாஸ் சம்பவங்கள்.. | Varisu Movie Deleted ScenesRepresentative Image

குடும்பப் படம்

கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் நாள், தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமே வாரிசு ஆகும். இந்தப் படமானது தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜீ தயாரிப்பில் வெளிவந்தது. இதில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், சுமன், பிரகாஷ் ராஜ், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் கதையானது, படத்தின் தலைப்பிலிருந்தே அனைவருக்கும் புரியும். குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும், அதனை நன்றாக கட்டிக் காப்பவரையே வாரிசாக நிர்ணயிப்பர். இவ்வாறு, கதையை சுவாரஸ்யமாகவும், சென்டிமென்டாகவும் கொண்டு வந்துள்ளார் வம்சி. பொதுவாக, விஜய் மூவி என்றாலே ரிலீஸ் ஆன 3, 4 மாதங்களுக்கு அதன் ஸ்பௌசு குறையாக இருக்கும். இந்த வாரிசு படத்திற்கு மட்டும் என்ன சொல்லவா வேண்டும்?

வாரிசு படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இது தான்! தெறிக்க விடும் மாஸ் சம்பவங்கள்.. | Varisu Movie Deleted ScenesRepresentative Image

வாரிசு அள்ளித்தந்த வசூல்

குடும்பத்தை மையமாக வைத்து கதை போன போதிலும், அதில் விறுவிறுப்புக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை என்றே கூறலாம். இந்தப் படத்தின் வசூல் ஆனது, உலகளவில் 300 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தப் படம் ரிலீஸ் ஆகி 50 நாட்களைக் கடந்த போதிலும், விஜய் ரசிகர்கள் இன்றளவும் வாரிசு படத்தைக் கொண்டாடி பார்த்து வருகின்றனர்.

வாரிசு படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இது தான்! தெறிக்க விடும் மாஸ் சம்பவங்கள்.. | Varisu Movie Deleted ScenesRepresentative Image

நீக்கப்பட்ட காட்சிகள்

இந்நிலையில், வாரிசு படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை அமேசான் ப்ரைம் ஓடிடி தளமானது வெளியிட்டுள்ளது. வாரிசு படத்தின் நீக்கப்பட்ட காட்சியில் விஜய்யும், பிரகாஷ் ராஜூம் நேருக்கு நேர் மோதி கொள்வதான காட்சியாக உள்ளது. பிரகாஷ்ராஜ் அலுவலகத்திற்கு விஜய் சென்று, முதலில் அமைதியாகப் பேசுகிறார். ஆனால், விஜயிடம் சரத்குமாரின் அடையாளத்தை அழிப்பேன் என பிரகாஷ்ராஜ் சவால் விடுகிறார். இதனைக் கேட்டு, கடுப்பாகும் விஜய் நீன் என் அடையாளத்தை அழித்தால், நான் உன் அஸ்திவாரத்தை அழித்து விடுவேன் என மிரட்டல் வசனங்களை பேசி கபடி ஆடுகிறார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்