Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லோகேஷுக்கு கார்... ADs க்கு பைக்ஸ்... அசத்திய கமல்ஹாசன்!

UDHAYA KUMAR June 07, 2022 & 18:24 [IST]
லோகேஷுக்கு கார்... ADs க்கு பைக்ஸ்... அசத்திய கமல்ஹாசன்!Representative Image.

லோகேஷ் கனகராஜூக்கு கார் பரிசளித்து அசத்தியுள்ளார் கமல்ஹாசன். இதனால் லோகேஷ் கனகராஜ் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார். விக்ரம் படத்தின் வெற்றி படக்குழுவினரை மட்டுமின்றி கமல்ஹாசன் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் குதூகலப்படுத்தியுள்ளது. 

உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடித்த திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன். செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் தங்களது தனித்திறமையைக் காட்டினர். இவர்கள் அனைவரும் விக்ரம் படத்தில் சிறப்பாக நடித்திருந்ததன் காரணமாக படம் வேற லெவலுக்கு வெற்றியடைந்துள்ளது. லோகேஷின் ஸ்க்ரிப்ட் நின்னு பேசிக் கொண்டிருக்கிறது. படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இசை என அத்தனை அம்சங்களும் படத்தில் பேசப்படுகின்றன. 

கடந்த ஜூன் 3ம் தேதி வெளியான இந்த திரைப்படத்தின் வெற்றி ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டது போன்று, முதல் நாள் காட்சி அனைத்து தியேட்டர்களிலும் முந்தைய தினங்களிலேயே விற்கப்பட்டு ஹவுஸ் புல் ஆனது. அடுத்து சனி, ஞாயிறு நாட்களிலும் மிக அதிக அளவில் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர். இதனால் வசூல் இரட்டிப்பாகி பல மடங்கு லாபத்தைப் பெற்றுத் தந்தது. 

உலகம் முழுக்க விக்ரம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தயாரிப்பு தரப்பும் பயங்கர குஷியில் இருப்பதால், கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கார் பரிசு வழங்கியுள்ளார். மேலும் லோகேஷிடம் உதவி இயக்குநராக இருக்கும் 13 பேருக்கும் பைக் பரிசாக வழங்கியுள்ளது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம். 

முன்னதாக,  லோகேஷுக்கு கமல்ஹாசன் கைப்பட ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதனை லைஃப் டைம் செட்டில்மண்ட் எனக் கூறி டிவிட்டரில் பதிவு செய்திருந்தார் லோகேஷ். அடுத்து வீடியோவில் 5 மொழிகளில் பேசி அனைத்து படக்குழு பணியாளர்களுக்கும் டெக்னிக்கல், ஆர்ட் என அத்தனை குழுக்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், எடிட்டர், கேமராமேன், இசையமைப்பாளர் அனிருத், ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த வெற்றியின் புகழ் சென்று சேரவேண்டும் என தெரிவித்திருந்தார். 

Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்