Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கமல்ஹாசனுடன் இணையும் மம்மூட்டி! கிட்டத்தட்ட கன்பார்ஃம் ஆகிடிச்சு! இன்னுமொரு சர்ப்ரைஸ்!

UDHAYA KUMAR June 28, 2022 & 19:39 [IST]
கமல்ஹாசனுடன் இணையும் மம்மூட்டி! கிட்டத்தட்ட கன்பார்ஃம் ஆகிடிச்சு! இன்னுமொரு சர்ப்ரைஸ்!Representative Image.

விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனுக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜும் கமல்ஹாசனும் மீண்டும் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் இணையவுள்ளனர். முன்னதாக லோகேஷ் தளபதி விஜய்யுடன் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.  கமல்ஹாசனும் தனது சொந்த கதையில் நடிக்கவுள்ளார். 

கமல்ஹாசன் நடிக்கவுள்ள அந்த திரைப்படத்தை இயக்க மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்துள்ளார் கமல்ஹாசன். இதற்காக அமெரிக்கா வரை சென்று ஸ்க்ரிப்ட் பணிகளை முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள் இருவரும். விரைவில் இந்த படத்தை குறித்த அறிவிப்பு வெளிவரும். அதற்கு முன்னதாக மகேஷ் நாராயணன் தனது படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களை சந்தித்து பேசி ஒப்பந்தம் செய்யும் பணியில் இறங்கியுள்ளாராம். 

கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அந்த சந்திப்பில் சுமூகமாக பேச்சுவார்த்தை நிகழ்ந்துள்ளதாம். மம்மூட்டிக்கு கதை மிகவும் பிடித்துள்ளதாம்.

மம்மூட்டி நிச்சயமாக நடிப்பார் என மகேஷ் நாராயணன் நம்பிக்கையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ் நாராயணன் பேசியும் சம்மதிக்காத பட்சத்தில் கமல்ஹாசனே நேரடியாக மம்மூட்டியைச் சந்தித்து பேசவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. முன்னதாகவே கமல்ஹாசன் சில திரைப்படங்களுக்காக மம்மூட்டியை அணுகியுள்ளார். ஆனால் மம்மூட்டியின் கதாபாத்திரத்தில் அவருக்கு உடன்பாடு இல்லாத நிலையில், வேறொரு படம் செய்துகொள்ளலாம்.  சரியான கதாபாத்திரம் அமையட்டும் என சொல்லிவிட்டாராம் மம்மூட்டி. 

மம்மூட்டி, கமல்ஹாசன் இணைந்து நடிப்பதுடன் இன்னுமொரு சர்ப்ரைஸும் படத்தில் காத்திருக்கிறதாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்