Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

kamal vs rajini ரஜினி Vs கமல் யார் கெத்து ?

UDHAYA KUMAR June 13, 2022 & 11:06 [IST]
kamal vs rajini ரஜினி  Vs கமல் யார் கெத்து ?Representative Image.

உலகிலேயே மிகப் பெரிய ரிவல்ரி ஃபேன் ஃபைட் என்றால் அது ரஜினி ரசிகர்களுக்கும் கமல் ரசிகர்களுக்கும் இடையேயானதாகத்தான் இருக்கும். அது வெறுமனே டிவிட்டரில் அடித்துக் கொள்வது போலல்ல. நிஜத்திலேயே சண்டை நடக்கும் என அவர் சொல்லும்போது நமக்கே புல்லரித்தது. ரஜினி  - கமல் இருவரும் எப்படி ஒற்றுமையாக இன்றும் நண்பர்களாக இருக்கிறார்கள். ஆனால் ரசிக சண்டை நடந்துகொண்டே இருக்கிறதே என்று. சரி நாமும் சில புள்ளி விவரங்களைப் பெற்று தொகுத்து வைத்திருக்கிறோம். 

யார் கெத்து? ரஜினியா கமலா? ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற படம் எது வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

தங்கமகன் - தூங்காதே தம்பி தூங்காதே

 1983ம் ஆண்டு வெளியான இந்த படங்கள் இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டன. ரஜினிக்கு மூன்று முகம் என்ற படத்தைக் கொடுத்த ஜகநாதன்தான் இந்த படத்தையும் இயக்கியிருந்தார். இவரே கமலுக்கு காதல் பரிசு எனும் படத்தை இயக்கியவர். தங்கமகன் படத்தில் ரஜினி ஜோடியாக பூர்ணிமா நடித்திருந்தார். 200 நாட்கள் தாண்டி ஓடியது இந்த படம். 

பஞ்சு அருணாச்சலம் கதையில் எஸ் பி முத்துராமன் இயக்கிய படம் தூங்காதே தம்பி தூங்காதே. இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அந்த காலத்திலேயே 4 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து மிகப் பெரிய சாதனை செய்திருந்தது திரைப்படம். இரண்டு படங்களுக்கும் இசை இளையராஜாதான். 

நல்லவனுக்கு நல்லவன் - எனக்குள் ஒருவன்

1984ம் ஆண்டு வெளியான நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்தின் கதை ரசிகர்களை கவர்ந்திழுத்தது.  முந்தைய வருடத்தில் கமல்ஹாசனுக்கு வெற்றியை அள்ளிக் கொடுத்த எஸ் பி முத்துராமன்தான் ரஜினிக்கு  நல்லவனுக்கு நல்லவன் படத்தை இயக்கிக் கொடுத்தார். இந்த படத்துக்கும் இசை இளையராஜாதான். 

எனக்குள் ஒருவன் திரைப்படத்தை இயக்கியவரும் எஸ் பி முத்துராமன்தான். வழக்கமான பாணி திரைப்படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக முயற்சித்திருந்தார்கள், ஆனால் ரசிகர்களிடம் சரியாக சென்று சேரவில்லை. பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆன நிலையிலும் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சராசரியான வெற்றியைத் தான் பெற்றது. 


நான் சிகப்பு மனிதன் - காக்கிச் சட்டை

1985ம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் ஹிந்தி திரைப்படத்திலிருந்து ரீமேக் செய்த படம்தான் நான் சிகப்பு மனிதன். கதை அருமையானதாக இருந்ததால் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ரஜினி வழக்கமான மசாலா படங்களைப் போலல்லாமல் 50 சதவிகிதம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படம் இது. ஆனாலும் காக்கிச் சட்டை திரைப்படத்தை ஒப்பிடும்போது இது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 

ராஜசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்த படம் அண்டர் கவர் போலீஸாக வில்லன் குழுவுடன் பயணிக்கும் ஒரு புது போலீஸின் கதை. பாடல்கள் அனைத்தும் வெற்றி. 200 நாட்களுக்கும் அதிகமாக ஓடி வசூல் சாதனை புரிந்தது இந்த படம். 


படிக்காதவன்  - ஜப்பானில் கல்யாணராமன்

கமலுக்கு காக்கிச் சட்டை என மெகா ஹிட் கொடுத்த ராஜசேகர், ரஜினிக்கு கொடுத்த படம் படிக்காதவன்.  ரஜினி, அம்பிகா, சிவாஜி, நாகேஷ் உள்ளிட்டோர் நடித்து இந்த படம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. 250 நாட்கள் வரை ஓடி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த படம். 

படிக்காதவனுடன் ஒப்பிடும்போது பெரிய வெற்றி இல்லையென்றாலும், எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் சராசரி வெற்றியடைந்தது இந்த படம். தமிழின் முதல் சீக்குவல் படம் எனும் பெருமையுடன் வெளியானது இந்த படம். கல்யாண ராமனின் ஆவி வந்து படத்தில் பயங்கர கலாட்டாவாக அமையும். பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட். 

இன்னும் சில படங்களில் லிஸ்ட்ல் இருக்கிறது விரைவில் அதுகுறித்து காண்போம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்