Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தல, தளபதி! இது லிஸ்ட்லயே இல்லியே!

UDHAYA KUMAR Updated:
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தல, தளபதி! இது லிஸ்ட்லயே இல்லியே!Representative Image.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் தல, தளபதி இருவரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்பிட்ரா என ரசிகர்கள் வியந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் வீரம். இதன் தெலுங்கு பதிப்பான காட்டமராயுடு படத்தில் நடித்தவர் பவன்கல்யாண். இதுமட்டுமின்றி, நேர் கொண்ட பார்வை படத்தின் ரீமேக் படத்திலும் இவர்தான் நடித்திருந்தார். இப்படி அஜித் நடித்த சில படங்களை தெலுங்கில் பவன் கல்யாண் செய்திருப்பார். 

இதேபோல், விஜய் தமிழில் நடித்த பல படங்கள் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்திருந்த படங்கள்தான். இதனால் தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபுவும், பவன்கல்யாணும்தான் தல, தளபதி. அங்கு அவர்கள் இருவரும் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோருக்கு நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். 

Image

இவர்கள்தான் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். இதைத்தான் அப்படி சுத்தி சுத்தி சொல்லிட்ருக்காங்க போல.  விஜய் வார்த்தைக்கு வார்த்தை நண்பர் நண்பர்னு கூப்பிடும் அஜித் வருவாரா என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அஜித் அவர் படத்துக்கே வருவது இல்லை என சிலர் பதில் சொல்கிறார்கள். ஜாலியாக செல்கிறது இணைய உலகம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்