Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உத்தம வில்லனை நினைவு படுத்திய அழுகை! You deserve better people! ரசிகருக்கு கமல் அளித்த பதில் இதுதான்!

UDHAYA KUMAR May 24, 2022 & 19:02 [IST]
உத்தம வில்லனை நினைவு படுத்திய அழுகை! You deserve better people! ரசிகருக்கு கமல் அளித்த பதில் இதுதான்!Representative Image.

உலக அளவில் பிரபலமான இந்திய நடிகர்களுள் முக்கியமானவர் கமல்ஹாசன். இவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார். அவரது நடிப்பில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் புரோமோசன் பணிகளுக்காக கமல்ஹாசனும், லோகேஷ் கனகராஜும் இந்தியா முழுக்க சுற்றுப் பயணம் செய்யவுள்ளனர். இதில் முக்கிய அம்சமாக, கமல்ஹாசன் ரசிகர்கள் சிலரை அணுகி கமல்ஹாசன் மீது அவர்களுக்கு உள்ள அன்பை வெளிப்படுத்து விதமாக பேச வைத்தனர். அப்போதுதான் அந்த சர்ப்ரைஸ் நிகழ்ந்தது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். வரும் ஜூன் 3ம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ளது. இதனிடையே புரோமோசன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் குறித்து பேசிக்கொண்டிருந்த ரசிகர்கள் முன் திடீரென அவர் தோன்றி நின்றால் என்ன ஆகும். அதனை பார்க்கும் பொருட்டு ஒரு நிகழ்வு நடைபெற்றது. 

கமல்ஹாசன் குறித்து ரசிகர்கள் சிலாகித்து பேசிக்கொண்டிருந்த இரண்டொரு நிமிடங்களில் திடீரென கமல் அவர்கள் முன் தோன்றினார். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் முதலில் தடுமாறினாலும் பின் சுதாரித்து கொண்டு அவர் மீதான காதலை தங்கள் கண்களிலும் வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினர். அதில் முக்கியமாக பிரசாந்த் எனும் ரசிகரைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். 

உத்தம வில்லன் திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்த கதாபாத்திரத்தின் மகனாக நடிக்கும் சிறுவன், அவரைப் பார்த்து பேசும் சில வசனங்களில், கமல்ஹாசன் கண்களிலேயே நடித்திருப்பார். அதனை பார்த்ததும் நம் அனைவருக்கும் கண்கள் குளமாகும். அப்படி ஒரு காட்சி அது. அதனை நினைவு கூறும் வகையில் பிரசாந்த் நடந்துகொண்டது பல ரசிகர்களை மீண்டும் பழைய நினைவுகளை தூண்டிக்கொள்ள உதவியது. பலரும் தாங்களே கமலை சந்தித்தது போன்று மகிழ்ச்சியுற்றனர். 

பிரசாந்த் சொன்னது என்னவோ சிறிய வார்த்தை போலத்தான் இருந்தது. ஆனால் கமல்ஹாசனின் திறமையை சந்தேகிக்காதவர்களுக்கு அது உண்மையான வார்த்தை என்பது தெரியும். you deserve better people. 

அதற்கு ஒரு நொடி தாமதமின்றி கமல்ஹாசன் அவர்களிடமிருந்து வந்த பதில், I have got you என்பதுதான். கேளிக்கைதானே என்றாலும் அதில் அடங்கியிருக்கும் உணர்ச்சிகள் திடீரென பெருக்கெடுத்து ஓடும் அளவுக்கு அழுத்தம் வாய்ந்தது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்