Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கமல்ஹாசனுடன் நடனமாடும் விஜய்! வேற லெவலுக்கு வைரலாகும் வீடியோ!

UDHAYA KUMAR June 09, 2022 & 19:21 [IST]
கமல்ஹாசனுடன் நடனமாடும் விஜய்! வேற லெவலுக்கு வைரலாகும் வீடியோ!Representative Image.

நடிகர் கமல்ஹாசனும் விஜய்யும் சேர்ந்து பார்ட்டி ஒன்றில் நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகி உலகம் முழுக்க சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்னும் பல படங்கள் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஜய் நடிப்பில் வெளியாகும் என நம்பிக்கை உருவாகியுள்ளது. 

லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் கமல்ஹாசன், கார்த்தி, சூர்யாவை இணைக்கும் பகுதியை லோகேஷ் ஏற்கனவே செய்துவிட்டார். இனி விஜய்யை வைத்து சினிமாட்டிக் யூனிவர்ஸில் என்ன செய்வார் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

கமல்ஹாசனும் விஜய்யும் விரைவில் இணைவார்கள் எனவும் அந்த படம் வேற லெவலுக்கு பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கும் எனவும் கமல் மற்றும் விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே ஒரு பார்ட்டியில் விஜய் மற்றும் கமல் இருவரும் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசன் நடனமாடும் அந்த வீடியோவில் பின்னணியில் இளமை இதோ இதோ பாடல் ஒலிக்கிறது. லீலைகளில் மன்னவன் என வரிகள் ஒலிக்கும்போது கமல்ஹாசன் விஜய்யை கை காண்பிக்கிறார். இப்படியாக பாடல் முழுவதும் ஆடும் கமலுக்கு சிறிய ஸ்டெப் மூலம் கம்பெனி கொடுக்கிறார் விஜய். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்