Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

kamal haasan industry hits வெறித்தனமாக ஆடிய கமல்ஹாசன்! விக்ரமுக்கு முன்னாடியே இத்தனை படங்களா?

UDHAYA KUMAR June 20, 2022 & 14:15 [IST]
kamal haasan industry hits வெறித்தனமாக ஆடிய கமல்ஹாசன்! விக்ரமுக்கு முன்னாடியே இத்தனை படங்களா?Representative Image.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்துகொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தின் மொத்த வசூல் 500 கோடியை நெருங்கி வருகிறது. கிட்டத்தட்ட 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 500 கோடியை நெருங்கிவருவது மிகப் பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது. 

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி ஓரளவுக்கு வசூல் செய்த 2.0 மற்றும் நல்ல வசூலை பெற்ற ஆர்ஆர்ஆர், பாகுபலி சாதனைகளை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளது விக்ரம் திரைப்படம். இதற்கு முன்பே கமல்ஹாசன் நடிப்பில் பல படங்கள் இப்படி இன்டஸ்ட்ரீ ஹிட் அடித்துள்ளன. 

சகலகலா வல்லவன் - 1982

கமல்ஹாசன், அம்பிகா நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியாகி சரித்திரத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் சகலகலா வல்லவன். 

அபூர்வ சகோதரர்கள் 1989

கமல் குட்டை, நெட்டை என ரெட்டை வேடங்களில் நடித்து அசத்திய இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக ரூபிணி மற்றும் கௌதமி ஆகியோர் நடித்திருப்பர். 

தேவர்மகன் 1992

கமல்ஹாசன், சிவாஜி இணைந்து நடித்திருந்த தேவர் மகன் திரைப்படம் இப்போதும் பல வளரும் இயக்குநர்களுக்கு பாலபாடமாக உள்ளது. திரைக்கதைக்கான சான்று இந்த படமாக இருக்கிறது. 

இந்தியன் 1996

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து அசத்திய இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை சுவைத்தது. இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. 

விக்ரம் 2022

இதுவரை பெற்ற வெற்றிகளிலேயே மிகப் பெரிய அளவிலான வெற்றியைக் கொடுத்துள்ளது இந்த திரைப்படம். லோகேஷ் கனகராஜ் அவரது ஃபேன்பாய் சம்பவத்தை காட்டியுள்ளார். 3 வாரங்களாக இந்த படம் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடி வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்