Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சம்பளத்திலும் கமல்தான் டாப்! ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் கமல்ஹாசன்!

Udhaya Kumar July 10, 2022 & 13:43 [IST]
சம்பளத்திலும் கமல்தான் டாப்! ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் கமல்ஹாசன்!Representative Image.

நடிகர் கமல்ஹாசன் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இப்போதுள்ள ரஜினி சம்பளத்தை விட கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் அதிக வருமானம் ஈட்டி இருப்பதையே இவ்வாறு கூறுகிறார்கள். இன்னும் விளங்கும்படி சொல்ல வேண்டும் என்றால்,  சராசரியாக ஒரு படத்தில் நடித்தால் ஒரு நடிகருக்கு கிடைக்கும் உட்சபட்ச சம்பளம் அல்லது வருமானம் எவ்வளவு எனும் கணக்கெடுத்தால் அதில் அதிக வருமானம் பெறும் நபர் கமல்ஹாசன்தான். 

விக்ரம் படத்தின் வெற்றி கமல்ஹாசனின் கிராஃபை வேறு லெவலுக்கு உயர்த்திவிட்டது. அவர் மட்டமின்றி லோகேஷ் கனகராஜின் சம்பளமும் உயர்ந்துவிட்டது. கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நரேன், செம்பன் வினோத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருந்தனர். அனைவரது கதாபாத்திரமும் பெயர் சொல்லும் அளவுக்கு இருந்தது அவர்களின் நடிப்பும் மிகப் பிரமாதம் என பேசப்பட்டு வருகிறது. 

கடந்த ஜூன் 3ம் தேதி வெளியாகி இன்று வரை வெற்றிகரமாக ஓடி வருகிறது விக்ரம் திரைப்படம். ஓடிடியில் வெளியாகிவிட்ட நிலையிலும் படத்தை தியேட்டரில் காண ஒரு பகுதி மக்கள் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவே படத்தின் வெற்றிக்கு சான்று. 

இந்நிலையில் கமல்ஹாசன் அடுத்து நடிக்கவுள்ள இந்தியன் 2 திரைப்படத்துக்கு அவரின் சம்பளம் எவ்வளவாக இருக்கும் என பலரும் கணக்கு போட்டு வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்