Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்ரம் போல கமலின் அடுத்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்! எப்படி தெரியுமா?

UDHAYA KUMAR June 30, 2022 & 19:22 [IST]
விக்ரம் போல கமலின் அடுத்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்! எப்படி தெரியுமா?Representative Image.

கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் உலகம் முழுக்க பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிலும் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனை நிரம்பி வழிகிறது. இதே பார்முலாவை அடுத்த படத்திலும் செய்து அந்த படத்தையும் ஹிட்டாக்க முடிவு செய்துள்ளார் கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது அடுத்த படத்துக்கான வேலைகளைத் துவங்கிவிட்டார். தனது சொந்த ஸ்கிரிப்டில் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படத்துக்கு இப்படி ஒரு வேலையை செய்துள்ளார். 

விக்ரம் படத்துக்கு இப்படி ஒரு வெற்றி கிடைக்க கதைக்களமும், பல வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படம் என்பதும் முக்கிய காரணமாக இருந்தாலும், மல்டி ஸ்டாரர் படமாக இருந்ததால்தான் அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. முக்கியமாக மலையாள ரசிகர்கள் படத்தை தங்கள் படம்போல கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில்தான், தனது அடுத்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க முடிவு செய்துள்ளார் கமல்ஹாசன். இந்த படத்தில் விஜய் சேதுபதி அல்லது பஹத் பாசில் இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ சேர்ந்து நடிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

கமல்ஹாசன், மம்மூட்டி, விஜய் சேதுபதி, பஹத் பாசில் என இத்தனை பேர் நடித்தால் படம் வெற்றிதானே. கதைக்களம் பற்றி கேட்கிறீர்களா? ஸ்க்ரிப்ட் கமல்ஹாசனாச்சே.. அப்ப கண்டிப்பா பிளாக்பஸ்டர்தான். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்