Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத், லோகேஷின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இப்பவே 54 கோடி லாபமாம்!

UDHAYA KUMAR May 30, 2022 & 20:08 [IST]
விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத், லோகேஷின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இப்பவே 54 கோடி லாபமாம்!Representative Image.

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம் விக்ரம். வரும் ஜூன் 3ம் தேதி உலகம் எங்கும் ரிலீஸாகிறது. சுமார் 200 கோடி வரை பிஸினஸ் செய்துள்ள இந்த படத்துக்காக கமல்ஹாசன், விஜய் சேதுபதி, லோகேஷ் ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட சம்பள விவரங்கள் தெரியவந்துள்ளது. 

கமல்ஹாசனே தயாரிக்கும் திரைப்படத்துக்கு அவருக்கே சம்பளமா என கேட்பது புரிகிறது. இது பிசினஸ், நாளை அடுத்த படங்களில் நடிக்கும்போது சம்பளம் பேசுவதற்காக இது இப்படி ஒரு ஏற்பாடு.

கமல்ஹாசனுக்கு சம்பளமாக 50 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாம். அப்படியானால் விஜய் சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம்?

விக்ரம் திரைப்படத்தில் கமலுக்கு அடுத்தபடியாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு  10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம்.  மேலும் லோகேஷ் கனகராஜுக்கு 8 கோடி ரூபாய் சம்பளமும், பஹத் பாசில், அனிருத் ஆகியோருக்கு 4 கோடி ரூபாய் சம்பளமும் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுடன் சேர்ந்து மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் சேர்த்து 85 கோடி ரூபாய் சம்பளமாக மட்டும் வழங்கப்பட்டிருக்கிறதாம்.  தயாரிப்பு செலவாக 40 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளதாம். 

ரெட் ஜெயண்ட் நிறுவனம்  தமிழ்நாடு தியேட்டர் உரிமை 35 கோடி, சாட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் 98 கோடி, ஆடியோ ரைட்ஸ் 3 கோடி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ரைட்ஸ் 15 கோடியே 75 லட்சத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படி உலகம் முழுக்க இதுவரை 204 கோடியே 75 லட்சம் பிசினஸ் ஆகியுள்ளது. செலவுகள் தவிர்த்து பார்க்கும்போது கிட்டத்தட்ட 54 கோடி ரூபாய் வரை இப்போதே லாபம் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்