Thu ,Feb 22, 2024

சென்செக்ஸ் 73,158.24
535.15sensex(0.74%)
நிஃப்டி22,217.45
162.40sensex(0.74%)
USD
81.57
Exclusive

கமல்ஹாசன் எனக்கு நண்பரல்ல... அதிர்ச்சியளித்த மாதவன்! கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி...!

UDHAYA KUMAR June 30, 2022 & 12:13 [IST]
கமல்ஹாசன் எனக்கு நண்பரல்ல... அதிர்ச்சியளித்த மாதவன்! கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி...!Representative Image.

கேன்ஸ் விழாவின்போது, கமல்ஹாசனிடம் தன்னுடைய ராக்கெட்ரி படத்தைப் போட்டு காட்டியதாகவும் அவர் பார்த்துவிட்ட ஆச்சர்யப்பட்டு பாராட்டியதாகவும் மாதவன் தெரிவித்துள்ளார்.

நடிகர் மாதவன் நடிப்பில் கடைசியாக மாறா திரைப்படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. அதன்பிறகு அவரது கனவு திரைப்படங்களில் ஒன்றான ராக்கெட்ரி படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார். அதற்காக இயக்குநர் ஒருவரிடம் பேசி ஒப்பந்தம் செய்திருந்தபோது, எதிர்பாரா விதமாக அவரும் கழண்டு கொள்ள வேறு வழியின்றி தானே இயக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டதாக கூறியிருந்தார் மாதவன். ஆனால் உண்மையில் அவர் மிகச் சிறந்த இயக்கத்தைத் தந்துள்ளார் என கமல்ஹாசனே பாராட்டியிருக்கிறார். 

ஆம். கடந்த மாதம் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவிலிருந்து பலர் கலந்துகொண்டிருந்தனர். ஏ ஆர் ரஹ்மான், கமல்ஹாசன், மாதவன், பா ரஞ்சித் உள்ளிட்டோரும் இதில் அடக்கம். இந்த சமயத்தில்தான் மாதவன் கமல்ஹாசனிடம் தனது படத்தை பார்க்குமாறு கேட்டிருந்தாராம். 

முதன்முதலாக இயக்குநராக அறிமுகமாகும் மாதவன் இந்த படத்தை தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என 3 மொழிகளில் உருவாக்கியுள்ளார். நாளை இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்காக புரோமோசன் பணிகளில் மும்முரமாக சுழன்று கொண்டிருக்கிறார் மாதவன். 

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மொழிபெயர்ப்பு விசயத்தில் சிறு பிழையும், தவறான கணிப்பால் பெரும்பிழையும் நிகழ்த்தி சில நாட்களுக்கு அவரைப் பற்றி இணையதளம் முழுக்க எதிர்ப்புக் குரலில் முழங்கக் காரணமாகிவிட்டார் மாதவன். பின் தன்னுடைய தவறை உணர்ந்துகொண்டு தானே முன்வந்து வருத்தம் தெரிவித்து அந்த சர்ச்சைக் கருத்தை திரும்பபெற்றார். 

இஸ்ரோவில் பணிபுரிந்த நம்பி நாராயணன் என்ற இந்திய ஏரோ ஸ்பேஸ் இன்ஞினியரின் வாழ்க்கை வரலாறுதான் ராக்கெட்ரி. பல போராட்டங்களைச் சந்தித்த நம்பி நாராயணனின் கதை. தான் நிரபராதி என நிரூபிக்கப்பட்டிருந்தாலும் தன்னைப் பற்றி யாருக்கும் வெளியில் தெரியவில்லையே என்று கூட அவருக்கு வருத்தம் துளியும் இல்லை. நான் தேசப்பற்றாளன் தேசத் துரோகி இல்லை என்பதை நிரூபித்தாயிற்று என்றே பழைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். 

சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் நடிகர், தயாரிப்பாளர் கமல்ஹாசனை சந்தித்த மாதவன் தனது ராக்கெட்ரி படத்தை அவருக்கு திரையிட்டு காண்பித்தாராம். அதனைப் பார்த்துவிட்டு பாராட்டிய கமல்ஹாசன் நீங்களா இந்த படத்தை எடுத்தீர்கள் என ஆச்சர்யமாக கேட்க, வெட்கத்துடன் ஆமாம் என்றிருக்கிறார் மாதவன். கமல்ஹாசன் தன்னுடைய நண்பர் என்றெல்லாம் கூறிவிட முடியாது. அவரின் பக்தன் நான். விக்ரம் படம் பெற்ற வெற்றியால் எனக்கு ஈடற்ற மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். 

நாளை வெளியாகவுள்ள ராக்கெட்ரி படம் வெற்றி பெற Search around web சார்பாக நாமும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்