Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜூன் 3 கமல்ஹாசன் இந்த தியேட்டரில்தான் விக்ரம் பாக்க போறாராம்! புக் பண்ணிட்டீங்களா? ஆமா எந்த ஷோ?

UDHAYA KUMAR June 01, 2022 & 18:09 [IST]
ஜூன் 3 கமல்ஹாசன் இந்த தியேட்டரில்தான் விக்ரம் பாக்க போறாராம்! புக் பண்ணிட்டீங்களா? ஆமா எந்த ஷோ?Representative Image.

இந்திய திரையுலகின் மிக முக்கிய நடிகராக விளங்குபவர் கமல்ஹாசன். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்தியாவின் முக்கிய மொழிகளில் உருவாகும் படங்களில் மிகப் பெரிய வசூல் சாதனை படங்களை கொடுத்தவர். வசூலுக்கு வசூலும், விமர்சனத்துக்கு விமர்சனமும் நிறைந்த பல வெற்றிப்படங்களைத் தந்து இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பல ரசிகர்களை கொண்டவர்.


என்னதான் இருந்தாலும் இந்த விசயத்துல வலிமைதான் டாப்! அப்ப பீஸ்ட்?


கமல்ஹாசன் இதுவரை 230க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தைத் தயாரித்து நடித்துள்ளார். இவருடன் பஹத் பாசில், லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். மூன்று பெரிய நடிகர்களை வைத்து மிகவும் சுலபமாக படத்தை எடுத்து இன்னும் இரண்டு நாட்களில் ரிலீஸையும் அறிவித்துவிட்டனர். 

பட ரிலீஸுக்கு முன்னதாகவே 200 கோடி அளவுக்கு பிசினஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போதே 50 கோடி அளவுக்கு நிச்சயமான லாபம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாம். படம் வெளியாகி 2, 3 நாட்களில் நிச்சயம் 100 கோடியைத் தாண்டிவிடும், 1 வாரத்தில் 300 கோடி அளவுக்கு பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிரம்பும் என கணிக்கப்பட்டுள்ளது. 


Representative Image.  கிளைமேக்ஸ் இந்த கமல் படத்தோடதா ? தரமான ஃபேன்பாய் சம்பவம்!


உலகம் முழுக்க 5000 திரைகளில் படம் வெளியாகவுள்ளதால், முதல் 3 நாட்களில் மிகப்பெரிய அளவில் வசூல் நடக்கும் என தெரிகிறது. வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை கமல்ஹாசன் சென்னையின் சில திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் செக் பண்ண காத்திருக்கிறாராம். கோயம்பேடு ரோஹினி தியேட்டருக்கு கமல்ஹாசன் அதிகாலை 4 மணி காட்சிக்கு செல்வார் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் குதூகலமாகியுள்ளனர். இதுமட்டுமின்றி அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தின் முக்கிய நகரங்களிலுள்ள மிக முக்கிய திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறாராம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்