Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Story of rj balaji கண்கலங்கச் செய்யும் ஆர்ஜே பாலாஜியின் கதை!

UDHAYA KUMAR June 20, 2022 & 08:48 [IST]
Story of rj balaji கண்கலங்கச் செய்யும் ஆர்ஜே பாலாஜியின் கதை! Representative Image.

ஆர் ஜே பாலாஜியோட வாழ்க்கை படிப்படியா மேல வர நினைக்குற ஒவ்வொருத்தருக்கும் ஊக்கத்தை தரும் விதமா அமையும். கஷ்டப்பட்ட குடும்பம் அதனா கனவுகள துரத்தி பிடிக்க முடியலன்னு சாக்கு போக்கு சொல்றவங்களுக்கு சவுக்கடி கொடுத்த மாதிரி அமையும். 

ஒரு தம்பி, மூனு தங்கச்சிக்கு அண்ணனா மாறப்போறோம்னு அந்த குழந்தைக்கு அப்ப தெரியாது. ஜூன் 20 இதே நாள்லதான் அவரு சென்னைல பொறந்தாரு. ஆர் ஜே பாலாஜியோட அப்பா தன்னோட 5 குழந்தைகள பரிதவிக்கவிட்டுட்டு போயிட்டாரு. அம்மா மட்டும் நிறைய இடங்கள்ல வேலைக்கு போயி குடும்பத்த காப்பாத்துனாங்க. ஏதோ தமிழ்சினிமா, சீரியல் கதை மாதிரி இருக்குல்ல. அத நிஜமாவே அனுபவிச்சவரு ஆர் ஜே பாலாஜி. 

கல்லூரி படிக்கும்போது மீடியால வேலைக்கு போக ஆசைப்பட்டாரு. அங்க நடந்த கலாச்சார நிகழ்ச்சிகள் அவருக்கு ஊக்கத்தை தந்தன. மேடை ஏறுனாரு. பல விசயங்கள செஞ்சாரு. மக்கள் கைத் தட்டுனாங்க. அன்னைக்கு ஒரு முடிவு எடுத்தாரு இதேமாதிரி மக்கள் அமர்ந்திருக்குற மேடைகள்ல ஏறி நிக்கணும். கைத் தட்டு வாங்கணும். அது தொடரணும்னு. 

கோயம்புத்தூர் ரேடியோ மிர்ச்சில வேலை. ஹெலோ கோயம்புத்தூர்னு ஒரு நிகழ்ச்சிய 3 மணி நேரம் தொடர்ந்து நடத்துனாரு. அது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி. அப்றம் 4 வருசம் கழிச்சி அந்த வேலையை விட்டுட்டு சென்னைல பிக் எஃப் எம்ல வேலைக்கு சேர்ந்தாரு. அதன்மூலம்தான் ஃபார்ம் ஆனாரு பாலாஜி. கிராஸ்டாக்.. சரமாரியான பிராங்க் ஷோ. டிவில, யூடியூப்ல பிராங்க் பண்றதுக்கு இவரு முன்னோடி.  இப்படி ஆரம்பிச்சி சினிமாவுல காமெடியனா அவதாரம் எடுத்தாரு. 

காமெடி சீன்கள்ல நடிச்சாலும் ஒரு சில படங்கள் தவிர மற்ற படங்கள்ல பெருசா பேசப்படல. அவருக்கு சினிமா எடுக்கணும்னு ஆசை இருந்திருக்கும்போல. இயக்குநராகவும் வந்தாரு. அவரோட நடிப்பு, இயக்கம் னு அவர் பங்கு பெற்ற படங்களோட பட்டியல இப்ப பாக்கலாம். 

  • தீயா வேலை செய்யணும் குமாரு
  • வடகறி
  • நானும் ரௌடிதான்
  • தேவி
  • கடவுள் இருக்கான் குமாரு
  • கவலை வேண்டாம்
  • காற்று வெளியிடை
  • ஸ்பைடர்
  • வேலைக்காரன்
  • தானா சேர்ந்த கூட்டம்
  • கீ
  • தேவி 2

அவரே கதாநாயகனா நடிச்சி, அதுல இயக்குநராவும் எழுத்துப் பணியிலயும் தன்ன இணைச்சிக்கிட்ட படங்கள் மூன்று. 

  • எல்கேஜி 

ஒரு சாதாரண வார்டு கவுன்சிலர் எப்படி வளர்ந்து சிஎம் ஆகுறான்னு ஒரு ஹியூமர் நிறஞ்ச கதை. 

  • மூக்குத்தி அம்மன்

அம்மன் கண் முன்னாடி வந்தா வரம் கேட்க ஒரு லிஸ்ட்யே வச்சிருக்குற சாதாரண பக்தன் அம்மன் துணையோட போலி சாமியார தோலுரிக்கிற படம்.

  • வீட்ல விஷேசம்

கல்யாண வயசுல ஒரு பையன வச்சிக்கிட்டு இருக்குற தம்பதிக்கு மூனாவதா ஒரு குழந்தை பொறக்கப்போகுதுனு தெரிய வர, அத அந்த இளைஞன் எப்படி எடுத்துக்குறான் அப்படினு ஒரு கதை. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்