Thu ,Feb 29, 2024

சென்செக்ஸ் 72,304.88
0.00sensex(0.00%)
நிஃப்டி21,951.15
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

kanja poovu kannala meaning கஞ்ச பூ கண்ணால பாடலில் இப்படியெல்லாமா சொல்லிருக்காங்க! கவித கவித!

UDHAYA KUMAR May 26, 2022 & 10:18 [IST]
 kanja poovu kannala meaning கஞ்ச பூ கண்ணால பாடலில் இப்படியெல்லாமா சொல்லிருக்காங்க! கவித கவித!Representative Image.

கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்திலிருந்து கஞ்சா பூ கண்ணால பாடல் வெளியாகியுள்ளது. இதன் வரிகளில் ஒளிந்துள்ள அர்த்தத்தை தெரிந்து கொள்வோம். 

இந்த பாடலை எழுதியவர் கருமத்தூர் மணிமாறன். இசை யுவன் சங்கர் ராஜா. பாடியிருப்பவர் சித் ஸ்ரீராம்.


கஞ்ச பூ கண்ணால
 
செப்பு சிலை உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்சா தன்னால


 தகதகவென மின்னும் செப்புத் தகட்டால் செய்யப்பட்ட சிலையே,  கஞ்சா போல போதையேற்றும் கண்ணால் நீ பார்க்கும் போதும் 
உன் பல்லழகைக் காட்டி நீ சிரிக்கும்போதும் என் இடுப்பு வேட்டி அவிழ்ந்து போகிறது. 

கஞ்ச பூ கண்ணால

செப்பு சிலை உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்சா தன்னால


ஓன் தட்டாங்கை பல்லால

நீ சொன்ன ஒத்த சொல்லால

சூரியனையும் உடைப்பேன்டி

கவட்டை எடுத்து கல்லால

உன்னோட தட்டாங்கை பல்லால.. தட்டாம் பூச்சியோட கரங்கள் ரொம்ப மெல்லியதா, அடிக்கடி ஒட்டி ஒட்டி எடுக்குறமாதிரி இருக்கும். அதுமாதிரியான அழகான பல் இருக்குற நீ உன் வாயால ஒரு வார்த்தை சொன்னா, கவட்டை அதாவது கவண் எடுத்து கல்லால அடிப்பேன் சூரியன அப்படிங்குறாரு ஹீரோ. 

கருப்பட்டி கரைச்சி

செஞ்சு வச்ச சிலையா

பச்சரிசி போட்ட

பொங்கப்பானை ஒலையா

கருப்பட்டி கரைச்சி

செஞ்சு வச்ச சிலையா

பச்சரிசி போட்ட

பொங்கப்பானை ஒலையா

கருப்புக்கட்டிய கரைச்சி அதால வடிச்ச சிலை மாதிரி இருக்குற பச்சரிசி வச்சி பொங்குன சாதம் மாதரி வெண்மையா இருக்குற நீயி, 

ஈரக்கொலைய சுரண்டியென்ன

கொல்லுராயே கொலையா

ஈரக்கொலைய சுரண்டியென்ன

கொல்லுராயே கொலையா

என்னோட ஈரக்கொலைய சுரண்டி கொல்லுறியே. 

கஞ்ச பூ கண்ணால

செப்பு சிலை உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்ச தன்னால

 

அடி நடுச்சாமம் எழுப்பி

அந்த நட்சத்திரம் உலுப்பி

உன் மூக்குல காதுல

தோடா மாட்டி தொங்க விடபோறேன்

நட்சத்திரம் வர தாமதமாகுதுனா ராத்திரி நீ தூங்கிட்டுருக்கறப்ப, உன்ன எழுப்பி, அந்த நடுசாம நட்சத்திரங்கள உலுப்பி அத தோடா  மூக்குத்தியா செஞ்சி தொங்கவிடப் போறேன். 

அந்த ராத்திரிய கிள்ளி

கொஞ்சம் கருத்த மேகம் அல்லி

உன் இமைய பூசும் கண்ணு மையா

மாத்திக்கொண்டு நானும் வாரேன்

இரவின் இருளையும் மேகத்தின் கருமையையும் எடுத்து மை செய்து கொண்டு வாரேன் நீ இமைகளுக்கும் புருவத்துக்கும் பூசிக்கோ. 

மாடு குத்தி கிளிச்சாலும்

பொளச்சிக்குவேன்டி…

உன் புருவக்கத்தி குத்திப்புட்டா

என்ன செய்யுவேண்டி

நா வீரன். ஜல்லிக்கட்டு காளைகள கூட சும்மா கெத்தா நின்னு எதிர்த்து நிப்பேன். ஆனா உன்னோட கண்களுக்கு பதில் சொல்ல முடியாம சரிஞ்சி விழுந்துடுறேன். 

சூரக்கத்தி வீசனாலும்

நிமிந்து நிப்பேன்டி…

உன் சுண்டு விரல் பட்டுப்போனா

சொனங்கி போவேன்டி

சூரக்கத்தி எடுத்து வீசுனா கூட அப்படி கின்னுன்னு நிப்பேன் உன்னோட சுண்டு விரல் தீண்டலுக்கு சொனங்கிடுறேன். அதாவது விழுந்துடுறேன்.

நீ மனசு வெச்சா

மந்தக்கல்லையும்

திண்டு செமிப்பேன்டி

நீ மனசு வெச்சா

மந்தக்கல்லையும்

திண்டு செமிப்பேன்டி

மந்தக்கல்லுனா கிட்டத்தட்ட கருங்கல் மாதிரினு வச்சிக்கலாம். கல்லத் தின்னாலும் கரையுற வயசுங்குறமாதிரி. நீ மனசு வச்சேன்னா நா கல்ல தின்னு கூட செமிக்க வச்சிடுவேன். 

கஞ்ச பூ கண்ணால

செப்பு சிலை உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்ச தன்னால

 

ஓன் தட்டாங்கை பல்லால

நீ சொன்ன ஒத்த சொல்லால

சூரியனையும் உடைப்பேன்டி

கவட்டை எடுத்து கல்லால

KEYWORDS:

ganja poovu kannala song lyrics in tamil,

kanja poovu kannala lyrics in tamil,

kanja poovu kannala song download,

kanna poovu kannala video song download,

kanja poovu kannala ringtone download.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்