Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

porkanda singam lyrics meaning போர்க் கண்ட சிங்கம் பாடல் வரிகள் அர்த்தம்

UDHAYA KUMAR May 25, 2022 & 11:08 [IST]
porkanda singam lyrics meaning போர்க் கண்ட சிங்கம் பாடல் வரிகள் அர்த்தம் Representative Image.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்துக்கு இசை அனிருத். விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள போர கண்ட சிங்கம் பாடல் வரிகளையும் அதன் உள்ளர்த்தத்தையும் இந்த பதிவில் காண்போம்.

உயிரும் நடுங்குதே
உன்னையும் ஏந்திடவே
உடைந்த வீரனே
கலங்கி அழுகிறேன்

my life is trembling
to protect you
broken king
I cry in agony

நடந்த விசயங்கள பாத்து ஒரு கணம் நான் ஸ்தம்பித்து போயிட்டேன். நடந்ததெல்லாம் பாக்கும்போது உடைந்து போயி இருக்குற நான் உன்ன கையில தூக்கி ஆறுதல் சொல்லக்கூட தயங்கி நிக்குறேன். கலங்கி அழுறேன். 

சுழலும் உலகமே எனக்கு உறைந்ததே
அடுத்த நிமிடமும் நகர மறுக்குதே
மாரில் உன்னைச் சாய்த்து உறங்க வைப்பதா
இழந்த உயிருக்காக கொள்ளி வைப்பதா

The spinning world is frozen to me
The next minute refused to move
Leaning over the chest to put you to sleep
Whether to put the coffin for the lost life

உலகமே உறைந்து போயிடிச்சி. அடுத்த நொடி நேரம் கூட நின்னு போயிடிச்சி.  மார்பில உன்ன போட்டு தூங்க வைக்குறதா சிறு குழந்தைய தேத்துற வழி தெரியாம குழந்தை மாதிரி அழுதுகிட்டு நானும் என்னதான் செய்றது. இழந்த உயிருக்கு கொள்ளி வைக்கவும் நேரமில்ல. 
 
போர் கண்ட சிங்கம்
வலி கொண்ட நெஞ்சம்
உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்
அழுகாதே மகனே
என் ஆயுள் உனதே
இமை போல உனை காக்க நான் தேய்கிறேன் ஜீவனே

The war-torn lion
Heart with pain
I live for you even if broken
Do not cry, son
My life is yours
I'm Dissolving to protect you like an eyelid, life

நா உடைஞ்சாலும் நொறுங்கினாலும் உனக்காக உயிர் வாழுறேன். பல போர்கள்ல நிறைய வலிகள ஏத்துக்கிட்டு இருந்த நான் இப்ப உனக்காக இறங்கி வரேன். அழாதே டா மகனே. நா இருக்குற வரைக்கும் உன்னை காப்பேன். அதுக்காக போராடுவேன். 

உயிரும் நடுங்குதே
உன்னையும் ஏந்திடவே
உடைந்த வீரனே
கலங்கி அழுகிறேன்

my life is trembling
to protect you
broken king
I cry in agony

போர் கண்ட சிங்கம்
வலி கொண்ட நெஞ்சம்
உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்
அழுகாதே மகனே
என் ஆயுள் உனதே
இமை போல உனை காக்க நான் தேய்கிறேன் ஜீவனே

The war-torn lion
Heart with pain
I live for you even if broken
Do not cry, son
My life is yours
I'm Dissolving to protect you like an eyelid, life


கமல்ஹாசன் ஒருவேளை தாத்தாவா இருக்கலாம். அவரோட மகன இழந்துட்டு பேரனுக்காக களத்தில் இறங்கி சண்டை போடலாம். அதனாலதான் இந்த பாட்டானு தெரியல. ஆனா பாடல் வரிகள் அதுமாதிரிதான் தெரியுது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்