Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முடிதிருத்துபவனாக மாறியிருப்பேன்... கமலின் ரகசியத்தை வெளியிட்ட கார்த்தி...!

UDHAYAKUMAR September 01, 2022 & 15:00 [IST]
முடிதிருத்துபவனாக மாறியிருப்பேன்... கமலின் ரகசியத்தை வெளியிட்ட கார்த்தி...!Representative Image.

நடிகர் கமல்ஹாசன் பற்றி பேசிய கார்த்தி, அவர் முன்னர் ஒரு நாள் கொடுத்த பேட்டியில் அவர் பேசிய ஒரு விசயத்தைப் பற்றி கூறியுள்ளார். அந்த வீடியோவை தான் அடிக்கடி பார்ப்பதாகவும், அதிலிருந்து தனக்கு ஊக்கம் கிடைப்பதாகவும் கூறியுள்ளார் கார்த்தி. 

நடிகர் கமல்ஹாசன் தான் நடித்த அத்தனை படங்களிலும் ஏதாவது ஒன்றை புதிதாக வித்தியாசமாக செய்ய மெனக்கெடுவார். அந்த வகையில் அவரின் புதிய முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும் விதை அவர் போட்டது என கோலிவுட்டில் பெருமையாக கூறுகிறார்கள்.  அப்படி ஒரு விசயம்தான் கார்த்தி பேசியிருப்பது. 

கமல்ஹாசன் தனது பழைய பேட்டி ஒன்றில் இவ்வாறு பதிலளிக்கிறார். தான் சினிமாவுக்கு வராவிட்டால் என்ன ஆகியிருப்பேன் என்றால் முடிதிருத்தும் கலைஞனாக கூட ஆகியிருக்கலாம். அப்படி என்றாலும் இந்தியாவிலேயே டாப் முடி திருத்தும் கலைஞராக இருந்திருப்பேன் என வீடியோவில் கமல் கூறுவதாக கார்த்தி தெரிவித்திருந்தார். கமல்ஹாசன் அவர்களிடமிருந்து பல நல்ல விசயங்களைக் கற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்