Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சர்ச்சையை கிளப்பியுள்ள 'லியோ' பட போஸ்டர் - விஜய்க்கு அன்புமணிராமதாஸ் வேண்டுகோள்..!

Saraswathi Updated:
சர்ச்சையை கிளப்பியுள்ள 'லியோ' பட போஸ்டர் - விஜய்க்கு அன்புமணிராமதாஸ் வேண்டுகோள்..!Representative Image.

'லியோ' படத்தின் போஸ்டரில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

 

சர்ச்சையை கிளப்பியுள்ள 'லியோ' பட போஸ்டர் - விஜய்க்கு அன்புமணிராமதாஸ் வேண்டுகோள்..!Representative Image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில்லியோபடம் தயாராகிவருகிறது. மாஸ்டர் படத்துக்குப் பின் விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி 2வது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளார். லியோ படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் விஜய் - த்ரிஷா கூட்டணி 15 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளது.

மேலும், இந்தப் படத்தில் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

சர்ச்சையை கிளப்பியுள்ள 'லியோ' பட போஸ்டர் - விஜய்க்கு அன்புமணிராமதாஸ் வேண்டுகோள்..!Representative Image

லியோ படமானது அக்டோபர் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடையவுள்ள நிலையில், படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே வரும் ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் 49வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

அதனை முன்னிட்டு லியோ படத்தில் இருந்துநான் ரெடிஎன்னும் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், லியோ படம் தொடர்பாக வெளியாகியுள்ள போஸ்டர் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்தப் போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
 

சர்ச்சையை கிளப்பியுள்ள 'லியோ' பட போஸ்டர் - விஜய்க்கு அன்புமணிராமதாஸ் வேண்டுகோள்..!Representative Image

இந்த விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது.

கைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக விஜய் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான அழகிய தமிழ் மகன், 2012 ஆம் ஆண்டு துப்பாக்கி, 2018 ஆம் ஆண்டு சர்கார் உள்ளிட்ட படங்களிலும், அந்தப் படங்களின் போஸ்டர்களிலும் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றது. அதற்கு அன்புமணி ராமதாஸ் அப்போதும் தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்