Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கமல் போட்ட சண்டை! மயக்கம் போடும் அளவுக்கு சென்ற லோகேஷ்!

UDHAYA KUMAR May 23, 2022 & 19:12 [IST]
கமல் போட்ட சண்டை! மயக்கம் போடும் அளவுக்கு சென்ற லோகேஷ்! Representative Image.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக கலைஞரான உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது தெரியும். ஆனால் இந்த அளவுக்கு அவர் தீவிர ரசிகரா என நினைக்கும் அளவுக்கு அவரின் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ள நிகழ்வு நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. 

கமல்ஹாசனின் விக்ரம் படம் வெளியான அதே ஆண்டில்தான் லோகேஷ் கனகராஜ் பிறந்திருந்தார். அவரது வயதுதான் விக்ரம் படத்தின் காலமும் கூட. இப்படி ஒரு  விசயம் இருப்பதை பேட்டியில் கூறிய லோகேஷ், தனக்கு விக்ரம் என பெயர் வைக்கவில்லை என்று தாயிடம் கோபித்துக் கொண்டதையும் நினைவு கூர்ந்தார். தான் எப்போதிருந்து தீவிர ஃபேன் ஆனதாக கேட்டிருந்த கேள்விக்கு தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்திருந்தார் லோகேஷ். 

கமல்ஹாசனின் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் தியேட்டரில் சென்று பார்ப்பது வழக்கம். பழைய விக்ரம் படம் வெளியான சமயத்தில் லோகேஷ் சிறு குழந்தை. 6,7 வது படிக்கும்போதெல்லாம் டெக்கில் வாங்கி படத்தை பார்த்ததாகவும், எத்தனை முறை பார்த்தேன் என்பது தெரியவில்லை எனவும் கூறினார். இளைஞரான பிறகு எத்தனை படங்களை எந்தெந்த ஊர்களுக்கு சென்று பார்த்திருக்கிறோம். மற்ற நடிகர்களின் ரசிகர்களான அவரது நண்பர்களுடன் எல்லா திரைப்படங்களுக்கும் செல்வதாகவும், அப்போதெல்லாம் கமல்ஹாசன் படம் வரவில்லை என தான் வருத்தத்தில் இருந்தாகவும் கூறினார். 

கமல்ஹாசன் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படங்கள் வந்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. அவரை ரசிகர்கள் 4 வருடங்களுக்குப் பிறகு திரையில் பார்க்கின்றனர், கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு அவர் கேமரா முன் நடிக்கிறார்.  விஸ்வரூபம் படத்தின்போது கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட பிரச்னை, தமிழகத்தில் ரிலீஸ் இல்லை என்றபோது கர்நாடகா, கேரளா என தேடித் திரிந்தனராம். 

கேரளாவில் அருகில் பெரிய தியேட்டர்கள் எதுவும் நல்லா இல்லை என்றபோது பெங்களூருவுக்கு சென்று படத்தை பார்த்துவிட்டு திரும்பியுள்ளனர்.  விஸ்வரூபம் படத்தில் வரும் விஷாம் டிரான்ஃபாமேசன் சீனைப் பார்த்துவிட்டு தொண்டை கிழிய கத்தி என்ஜாய் செய்திருக்கிறார் லோகேஷ். இதனால் மயக்கம் அடையும் அளவுக்கு சென்றுவிட்டாராம். இதனை பேட்டியில் அவர் தெரிவிக்கும்போது அவரின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்