Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிவகார்த்திகேயன் படத்துக்கு கொட்டிக் கொடுத்த ஸ்டார்!

UDHAYAKUMAR [IST]
சிவகார்த்திகேயன் படத்துக்கு கொட்டிக் கொடுத்த ஸ்டார்! Representative Image.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்துக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டர் உரிமையைப் பெற கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்துள்ளது ஸ்டார் நெட்வொர்க் என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக். இதற்கெல்லாம் காரணம் அடுத்தடுத்து இரண்டு 100 கோடி படங்களைக் கொடுத்ததுதான். 

தொலைக்காட்சியிலிருந்து வந்து சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் வித்தியாசமான கதை அம்சங்களுடன், இளைஞர்களை கவரும் விதமாக அமைந்திருந்தது. கடைசியாக வந்த டான் திரைப்படமும் சரி அதற்கு முன் வெளியான டாக்டர் திரைப்படமும் சரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

சிவகார்த்திகேயன் தயாரிப்பிலேயே 100 கோடி வசூல் என்பது மிகப்பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது. இதுதான் தற்போது பிரின்ஸ் பட உரிமை விற்பனையிலும் பிரதிபலித்துள்ளது. ஸ்டார் நிறுவனம் சிவகார்த்திகேயனின் படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்