Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

who is vikram யார் விக்ரம்! லோகேஷ் தந்த சுவாரஸ்ய பதில்! சஸ்பென்ஸுங்க...

UDHAYA KUMAR May 23, 2022 & 16:05 [IST]
who is vikram யார் விக்ரம்! லோகேஷ் தந்த சுவாரஸ்ய பதில்! சஸ்பென்ஸுங்க...Representative Image.

கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காரணம் இந்த படத்தில கமல்ஹாசனுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. 

பத்தல பத்தல பாடலும் வெளியாகி வேற லெவலுக்கு டிரெண்ட் ஆகியிருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ கடந்த 15ம் தேதி வெளியானது. வரும் ஜூன் 3ம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஜூன் 2ம் தேதி மாலையிலேயே ப்ரீமியர் ஷோ திரையிடப்படவிருக்கிறது. 

இந்த படத்துக்கான புரோமோசன் நடவடிக்கைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக விக்ரம் குறித்து அவர் யூடியூப் சேனல்களில் வெளியிட்டுள்ள பேட்டிகள் அந்த அளவுக்கு வைரலாகி வருகின்றனர். இந்நிலையில், ஒரு பேட்டியில் விக்ரம் படத்தின் டிரெய்லர் காட்சியில் ஏற்பட்ட சந்தேகம் பற்றி கேட்கப்பட்டது. 

விக்ரம் டிரெய்லரின் இறுதியில் கமல்ஹாசன் விக்ரம் விக்ரம் விக்ரம்ம்ம்ம் என கத்தி பேசுவதோடு முடியும். அப்படியென்றால் விக்ரம் யார் என்கிற கேள்வியும் அதில் தொடர்கிறது. இது லோகேஷிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு அவர் சுவாரஸ்யமான பதிலை அழகாக அளித்தார். 

ஏற்கனவே படத்தில் நிறைய சஸ்பென்ஸ் காட்சிகள், விசயங்களை வைத்திருந்தோம். திரைப்படத்தை தியேட்டர்களில் காண வருபவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் வைக்கப்பட்ட பல சுவாரஸ்யமான விசயங்கள் இணையதளத்தில் கசிந்துவிட்டது. இதுவும் ஒரு சுவாரஸ்ய தருணம்தான். காத்திருப்போம்.படம் வெளியானதும் உங்களுக்கே தெரியும் என்று பதில் கூறினார் லோகேஷ் கனகராஜ். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்