Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Love Today 2022 லவ் டுடே திரைப்படம் எப்படி இருக்கு?

UDHAYA KUMAR November 04, 2022 & 12:40 [IST]
Love Today 2022 லவ் டுடே திரைப்படம் எப்படி இருக்கு?Representative Image.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே நடித்துள்ள திரைப்படம் லவ் டூடே. இதன் டீசரே பலரையும் கவர்ந்திருந்த நிலையில், இன்று இந்த படம் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கு? நடிகராகவும் இயக்குநராகவும் பிரதீப் பாஸாகியிருக்கிறாரா?  வாங்க பார்க்கலாம். 

Also Read:  யாருக்கு யார் ஜோடி..?  சும்மா, காபி வித் காதல்...... திரை விமர்சனம்!

கோமாளி படத்துக்குப் பிறகு  பிரதீப் ரங்கநாதனின் இயக்கி, நடித்துள்ள ‘லவ் டுடே’ படத்துக்கு பாசிடிவ் ரிவியூ கிடைத்துள்ளது.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இன்று தமிழக திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ள இப்படத்தில்  இவானா கதாநாயகியாக நடிக்க,  சத்யராஜ் அப்பா கதாபாத்திரத்திலும், ராதிகா அம்மா கதாபாத்திரத்திலும், யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும், சூப்பர் சிங்கர் ஆஜித்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  முன்னதாக வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வரவேற்பையும் பெற்றது.  இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. 

படத்துக்கு மிகப் பெரிய பக்க பலமாக யுவன் இருக்கிறார். அவரது இசையில் பாடல்கள் மட்டுமின்றி, குறிப்பிட்ட காட்சிகளில் நாமும் மெய் சிலிர்த்துப் போகின்றோம். பெரும்பாலும் காமெடிக்கான பிஜிஎம்களைத் தூவி, முக்கிய காட்சியில் செண்டிமெண்ட்டுக்கான சுவரங்களை ஒலிக்க விட்டு ரசிகர்களை தியேட்டரிலேயே அமர வைத்திருக்கிறார்.  

டிரெய்லரில் கதாநாயகியான இவானாவை திருமணம் செய்ய நினைக்கும் நாயகன் பிரதீப் அதற்காக அவரின் அப்பா சத்யராஜிடம் சம்மதம் கேட்கிறார். ஆனால் அங்கு ஒரு டிவிஸ்ட் வைக்கிறார் சத்யராஜ். அதாவது காதல் ஜோடி தங்களின் போனை ஒருநாள் மட்டும் ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டு அந்த நாளை கடந்து விட்டால் திருமணம் செய்து வைப்பதாக அவர் கூறுகிறார்.  அந்த இடத்தில் ரகளை துவங்குகிறது.  இவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது, இருவரும் சேர்ந்தார்களா என்பது போல வழக்கமான கதையாக இல்லாமல், டிவிஸ்ட்கள் வைத்து படத்தை நகர்த்தியுள்ளார் பிரதீப். 

சென்ஸாரில் U/A சான்றிதழை பெற்ற லவ் டுடே படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டு படத்தின் நீளம் 2 மணி நேரம் 34 நிமிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் 1 மணி நேரம் 24 நிமிட காட்சியை கொண்ட இப்படம், இடைவேளைக்கு பின் 1 மணி நேரம் 10 நிமிடம் காட்சிகளை கொண்டது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்