Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் மோகன்லாலுடன் இணையும் கமல்ஹாசன்? வேற லெவல் அப்டேட்!

UDHAYA KUMAR Updated:
மீண்டும் மோகன்லாலுடன் இணையும் கமல்ஹாசன்? வேற லெவல் அப்டேட்!Representative Image.


லிஜோ ஜோஸ் பெலிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் புதிய படமான மலைக்கோட்டை வாலிபன் படத்தின் பெயர் நேற்று வெளியிடப்பட்டது. இதனால் மலையாள பட விரும்பிகள் குதூகலமாகியுள்ளார்கள். காரணம் லிஜோ ஜோஸ் பெலிசேரி. 

தமிழக ரசிகர்களுக்கும் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. மோகன்லாலுடன் மீண்டும் இணைகிறார் உலகநாயகன் கமல்ஹாசன். 

இந்தியாவில் நடிப்பில் சிறந்தவர் யார் என கமல்ஹாசன், மோகன்லால் ரசிகர்கள் அடிக்கடி முட்டிக் கொள்வார்கள். ஆனால் மோகன்லாலோ கமல்ஹாசனை எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டார். கமல் கேட்டுக் கொண்டதற்காக உன்னைப் போல் ஒருவன் படத்தில் நடித்து கொடுத்தார் மோகன்லால். 

இந்நிலையில், அங்கமாலி டைரீஸ், சுருளி, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல படங்களை இயக்கிய லிஜோவின் புதிய படமான மலைக்கோட்டை வாலிபன் படத்தில் கமல்ஹாசனையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். சில நிமிட காட்சிகள்தான் என்றாலும், மலையாளத்தில் சமீபகாலமாக கமல்ஹாசன் நேரடியாக படம் எதுவும் நடிக்கவில்லை. 

கமல்ஹாசனுக்கு கேரளத்திலும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவர்களுக்கும் இது மகிழ்ச்சியை வரவழைத்துள்ளது. கூடிய விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்