Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஏமாற்றப்பட்டாரா மஞ்சு வாரியர்? வருகிறதா வாய்ஸ்?

UDHAYA KUMAR Updated:
ஏமாற்றப்பட்டாரா மஞ்சு வாரியர்? வருகிறதா வாய்ஸ்?Representative Image.

துணிவு படத்தின் காசேதான் கடவுளடா பாடல் நேற்று வெளியான நிலையில், அதில் மஞ்சு வாரியர் ஏமாற்றப்பட்டதாக பலரும் சமூக  வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். இதுகுறித்து மீம்ஸ் வெளியிட்டு ரசிகர்கள் பலர் கலாய்த்து வருகின்றனர். 

ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் 3வது படம் துணிவு. இந்த படத்திலும் நாயகன் அஜித்குமார் தான். இவரது சூப்பரான கதைக்களத்தை நம்பி இந்த முறை மிகப் பெரிய மோதலுக்கு துணிந்து இறங்கியுள்ளது படக்குழு. 

துணிவு படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா கடந்த வாரம் ரிலீஸாகியிருந்த நிலையில், இந்த வாரம் காசேதான் கடவுளடா பாடல் வெளியிடப்பட்டது. இந்த இரு பாடல்களும் ஏற்கனவே லீக் ஆகியிருந்த நிலையில், இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு மிகுதியாக காணப்பட்டது. ஆனால் திடீரென்று அறிவிக்கப்பட்டதால், யாருக்கும் இந்த பாட்டு வெளியானது அவ்வளவாக தெரியவில்லை. 

பாடலை வைசாக், ஜிப்ரானுடன் சேர்ந்து மஞ்சு வாரியரும் பாடியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பாடலில் மஞ்சு வாரியரின் குரல் இல்லை. வெறுமனையாக அவர் வாயசைப்பது போலத்தான் தெரிகிறது. இதனால் சமூக வலைத்தளத்தில் பெருத்த ட்ரோலுக்கு ஆளானார் மஞ்சு. ஆனால் இந்த லிரிக் வீடியோ போலலல்லாமல், தான் பாடிய பகுதிகள் உண்மையான பாடலில் இடம்பெறும் என தெரிவித்துள்ளார் மஞ்சு வாரியர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்