Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீங்கள் உடனே பார்க்கவேண்டிய துல்கர் சல்மான் படங்கள் இவைதான்!

UDHAYAKUMAR July 28, 2022 & 16:06 [IST]
நீங்கள் உடனே பார்க்கவேண்டிய துல்கர் சல்மான் படங்கள் இவைதான்! Representative Image.

தமிழ் சினிமாவின் கதாநாயகர்களுள் ஒரு சிலர் மலையாள திரையுலகிலிருந்து வந்தவர்கள். ஆம். சில மலையாள நட்சத்திரங்களும் தமிழில் நடித்திருக்கிறார்கள் என்பதை விட மேற்படி சொல்வததுதான் சிறந்தது. காரணம் அவர்கள் நடித்த அத்தனை படங்களும் பேசப்பட்ட படங்களாக இருக்கும். அதில் முன்னணியில் இருப்பவர் மம்மூட்டி. இவர் நடிப்பில் வெளியான அத்தனை தமிழ் படங்களும் வேற லெவலுக்கு மக்களுக்கு பிடித்த படங்களாகும். இவரைப் போல துல்கர் சல்மானும் தமிழில் இடைவெளி விட்டு படங்களில் நடித்து வருகிறார். 

துல்கர் சல்மானைப் பிடிக்கும் ஆனால் அவரது மலையாளப் படங்களுக்கு பெரிய அளவில் நான் அறிமுகமாகவில்லை என கவலைப் படுகிறீர்களா? நீங்கள் கட்டாயம் காண வேண்டிய துல்கர் சல்மானின் டாப் படங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம். 

சார்லி

2015ம் ஆண்டு துல்கர் சல்மான், பார்வதி, அபர்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்த திரைப்படம் சார்லி.  மார்ட்டின் பிராக்கட் இயக்கிய இந்த படத்தின் கதையை எழுதியவர் உன்னி. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய சாதனையை செய்தது. துல்கர் சல்மானுக்கு கேரள திரையுலகின் முன்னணி நடிகர் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. 

கார்வான்

பிஜாய் நம்பியார் எழுதி ஆகர்ஸ் குரானா இயக்கிய திரைப்படம் கார்வான். ரோடு காமெடி டிராமா என அழைக்கப்படும் வகையைச் சார்ந்த இந்த படத்தில் துல்கர் சல்மான் தனது ஆத்மார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.  மிதிலா பால்கர், இர்ஃபான் கான் ஆகியோரும் உடன் நடித்திருப்பார்கள். 

பேங்களூர் டேய்ஸ்

மலையாளத் திரையுலகின் டாப் ஆக்டர்ஸ் என பாராட்டப்படும் துல்கர் சல்மான், நிவின் பாலி, பஹத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் இது.  இவர்களுடன் நஸ்ரியா, பார்வதி, நித்யா மேனன், இஷா தல்வார் உள்ளிட்டோர் நடித்திருப்பர். இதில்  துல்கர் சல்மான் துடிப்பு மிக்க இளைஞராக நடித்திருப்பார். 

சோலோ

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் வெளியான ஆந்தாலஜி திரைப்படம் இது.  துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க தன்ஷிகா, நேஹா, ஷ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ், தினோ, சௌபின் ஷாகிர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். 4 தனித்தனி கதைகளை எடுத்தக் கொண்டு அதில் கதாநாயகனுக்கும் மற்ற கதாபாத்திரங்களுக்கும் இடைப்பட்ட உணர்வுகளை மக்களுக்கு கடத்தும்வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும். 

காம்ரேட் இன் அமெரிக்கா

அமல் நீரட் இயக்கத்தில் துல்கர் சல்மான், கார்த்திகா முரளிதரன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காம்ரேட் இன் அமெரிக்கா. கேரளா காங்கிரஸ் கட்சியிலிருக்கும் குடும்பத்தில் பிறந்த இளைஞன் அஜி மேத்யூ. அவனது காதலுக்காக அமெரிக்கா செல்வதாக கதை நகரும். அமெரிக்கா செல்வதென்றால் சாதாரணமாக அல்ல, பல தடைகளைக் கடந்து, தேச எல்லைகளைத் தாண்டி இப்படி பல சோதனைகளுக்கு மத்தியில் எல்லை கடக்க முயலும் நாயகனின் கதைதான் CIA 

கலி

துல்கர் சல்மான், சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள திரைப்படம் கலி.  2016ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்கியவர் சமீர் தஹீர். 

ஓகே கண்மணி

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் இணைந்து நடித்த நியூ ஏஜ் காதல் கதைதான் இந்த ஓகே கண்மணி.  

கம்மட்டி பாடம்

பி பாலச்சந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான், சான் ரோமி இணைந்து நடித்த திரைப்படம் கம்மட்டி பாடம். 

செகண்ட் ஷோ

துல்கர் சல்மான் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான படம் செகண்ட் ஷோ. வினி விஷ்வ லால் கதையில் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கி வெளிவந்த திரைப்படம் இது. 

உஸ்தாத் ஹோட்டல்

மலையாளத்தில் வெளியான ஆகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான உஸ்தாத் ஹோட்டல் அஞ்சலி மேனன் கதையில் அன்வர் ரஷீத் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும். இதில் துல்கர் சல்மான், திலகன் இருவரும் தாத்தா, பேரனாக நடித்திருப்பார்கள். இருவருக்குள்ளும் இருக்கும் மிகச்சிறந்த அன்பு படத்தை பார்க்கும் நமக்கும் கடத்தப்படுவதுதான் சுவாரஸ்யம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்