தமிழ் சினிமாவின் தூண்கள் என்றால் அது கமல்ஹாசனும் ரஜினிகாந்தும்தான் என சிறு குழந்தைகள் கூட சொல்லிவிடும். அந்த அளவுக்கு காலங்கள் கடந்து இவர்களது பெயர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களான சிவாஜி, நாகேஷ், நம்பியார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர்களுடன் இணைந்து ரஜினி நடித்துள்ளார். ஆனால் கமல்ஹாசனின் நண்பரான ஒரு நகைச்சுவை ஜாம்பவானுடன் சேர்ந்து இவர் பணிபுரியவே இல்லை.
கதாநாயகனாக இருந்து முழு நீள நகைச்சுவை படத்தில் நடித்து அதில் வெற்றியும் பெற்றவர் கமல்ஹாசன். அதிலும் பல முறை வெற்றி கண்டவர். கிரேஸி மோகனுடன் பல முறை பணியாற்றியுள்ள கமல்ஹாசன், அவரைப் போன்றே காமெடி சென்ஸ் கொண்ட மௌலியுடன் இரண்டு மூன்று படங்கள் இணைந்து பணியாற்றியிருந்தார். ஆனால் ரஜினியும் மௌலியும் இணைந்ததே இல்லை.
ரஜினிகாந்தும் சில காமெடி படங்களில் நடித்திருந்தாலும் மௌலியுடன் இணைந்ததில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனென்றால் ரஜினியின் குருவான பாலச்சந்தரின் நெருங்கிய படைத்தளபதியாக இருந்தவர் மௌலி.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…