Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'நம்ம சத்தம்' பாடல் வரிகள் | பத்து தல | Namma Satham Song Lyrics in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
'நம்ம சத்தம்' பாடல் வரிகள் | பத்து தல | Namma Satham Song Lyrics in TamilRepresentative Image.

மாநாடு, வெந்து தணிந்து காடு படங்களை தொடர்ந்து சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தில் சிம்புவுடன் கலையரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல. இதனால், தமிழிலும் மாஸ் ஹிட் அடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. 

'நம்ம சத்தம்' பாடல் வரிகள் | பத்து தல | Namma Satham Song Lyrics in TamilRepresentative Image

படத்தின் பெயர்: பாத்து தல

பாடல்: நம்ம சத்தம் 

நடிகர்கள்: சிலம்பரசன் டிஆர், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டீஜய் அருணாசலம், அனு சித்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

பாடல் வரிகள்: விவேக்

பாடியவர்: ஏ.ஆர். ரஹ்மான்

இசை: ஏ.ஆர். ரஹ்மான்

இயக்குனர்: ஓபேலி. என். கிருஷ்ணா

'நம்ம சத்தம்' பாடல் வரிகள் | பத்து தல | Namma Satham Song Lyrics in TamilRepresentative Image

ஒரு சிலந்தி வலையில் சிங்கத்துக்கென்ன வேல நீ சொல்லு கண்ணு
குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும் பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா கிடைக்குமா
ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு அந்த இருள் விடிஞ்சது தெரியுமா
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா

கோடி நெருப்பா ஆரம்பிக்கிற
ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி
அது காலம் வரும்னு காத்து இருக்கல
பாஞ்சி உரசி பாத்திக்கிச்சு

ஒரு காத்து கொடுக்கும் சலசலப்புக்கு
மலையும் பயந்து வெலகுமா
புயலும் பதுங்க பழகுமா

ஒரு கால் எடுத்து நீ கடக்க நினச்சா
கவல மறையும் தெரியுமா

கொஞ்சம் பளிச்சு பளிச்சு பளிச்சுனு
நம்ம நெருப்ப தெளிச்சு போணும் கண்ணு

அக்கரையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில
நெஞ்சம் அவன சுத்தும்

'நம்ம சத்தம்' பாடல் வரிகள் | பத்து தல | Namma Satham Song Lyrics in TamilRepresentative Image

பட்டோம் அடி பட்டோம் அடிபட்டும் வந்து நிப்போம்
ஒரு அம்பா குறி வைப்போம் வெற்றி சதம் சத்தம் நித்தம் நித்தம்
வெப்போம் அடி வெப்போம் உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்தா நம்ம அன்ப சேமிப்போம்

கருவுக்குள் கைய தொட்டா
உறவுன்னா வந்து புட்டா
துணியாக வந்துபுட்டா
அந்த நிலா

கருவுக்குள் கைய தொட்டா
உறவுன்னா வந்து புட்டா
துணியாக வந்துபுட்டா
அந்த நிலா

அக்கரையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும்

சிப்பாயி பட்டாளம் ஆன அம்பாரி ஓங்கல் ஒய்யாரி
தெண்டி தெண்டி ஓ ஓ
ஊரே கூட்டிப்போற ஏனோ என்ன
அவன் இன்னைக்கென்ன ராசா வக

எல்லாமே நியாயம்
ஏத்துக்கோ காயம்
கொஞ்சம் தொலஞ்சு போகும்
பாக்குவமா வா நீயும்

அக்கரையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில
நெஞ்சம் அவன சுத்தும்

பட்டோம் அடி பட்டோம் அடிபட்டும் வந்து நிப்போம்
ஒரு அம்பா குறி வைப்போம் வெற்றி
சத்தம் சத்தம் நித்தம் நித்தம்

வெப்போம் அடி வெப்போம் உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்தா நம்ம அன்ப சேமிப்போம்

எல்லாமே நியாயம்
ஏத்துக்கோ காயம்
கொஞ்சம் தோலஞ்சு போவோம்
பாக்குவமா வா நீயும்

பாக்குவமா வா நீயும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்