Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேசிய விருது வாங்கியுள்ள சூர்யாவின் டாப் 10 - இந்த பத்து படமும்தான்..!

UDHAYAKUMAR July 23, 2022 & 16:21 [IST]
தேசிய விருது வாங்கியுள்ள சூர்யாவின் டாப் 10 - இந்த பத்து படமும்தான்..!Representative Image.

சூரரைப் போற்று படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார் நடிகர் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் இருந்தது. படத்துக்கான பின்னணி இசையும் பாடல்களும் சிறப்பாக இருந்தது. கதை கேட்டு படத்தை தேர்ந்தெடுப்பதில் சூர்யா வல்லவர். அப்படி அவர் தேர்ந்தெடுத்து நடித்து தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுத்து திறமையைக் காட்டிய படங்களில் டாப் 10 படங்களை இப்போது காண்போம். 

ஜெய்பீம்

த செ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ஜெய்பீம். இசை சான் ரோல்டன்

சூரரைப் போற்று

சுதாகொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி இணைந்து நடித்த திரைப்படம். இசை ஜிவி பிரகாஷ்

பிதாமகன்

விக்ரம் சூர்யா இணைந்து நடித்து பாலா இயக்கத்தில் உருவான திரைப்படம் பிதாமகன். சூர்யாவின் பெஸ்ட் திரைப்படங்களுள் மிக முக்கியமான படமாகும். இசை இளையராஜா

வாராணம் ஆயிரம்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, சிம்ரன், ரம்யா, சமீரா உள்ளிட்டோர் இணைந்து நடித்த படம் வாராணம் ஆயிரம். இசை ஹாரிஸ் ஜெயராஜ்

24

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா 3 வேடங்களில் நடித்து அசத்திய திரைப்படம் 24. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இசை ஏ ஆர் ரஹ்மான்

ஆய்த எழுத்து

மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார், மீரா ஜாஸ்மின், த்ரிஷா உள்ளிட்டோர் இணைந்து நடித்த திரைப்படம் ஆய்த எழுத்து. இசை ஏ ஆர் ரஹ்மான் 

நந்தா

பாலா இயக்கத்தில் வெளியான இந்த படம் சூர்யாவுக்கு மிகப் பெரிய பலமாகும். இந்த படத்தின் மூலம்தான் சூர்யா தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார்.  சூர்யா ஜோடியாக லைலா நடித்திருப்பார். இசை யுவன்ஷங்கர் ராஜா

கஜினி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் சூர்யாவை இடம்பிடிக்கச் செய்த படம் இது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா நடித்த படம். இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

அயன்

கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா, பிரபு, ஜகன் உள்ளிட்டோர் நடித்த படம் அயன். கடத்தல் பிசினஸ் செய்யும் தலைகளை பற்றிய சூப்பரான படம். இசை ஹாரிஸ் ஜெயராஜ்

பேரழகன்

சசி சங்கர் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் பேரழகன். இசை யுவன்சங்கர் ராஜா. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்