Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

nayanthara o2 story 12 மணி நேரம் கெடு! உயிரோட இருக்கணும்னா இதெல்லாம் பண்ணனும்! அசத்தும் நயன்தாராவின் O2

UDHAYA KUMAR May 16, 2022 & 14:08 [IST]
nayanthara o2 story 12 மணி நேரம் கெடு!  உயிரோட இருக்கணும்னா இதெல்லாம் பண்ணனும்! அசத்தும் நயன்தாராவின் O2Representative Image.

பதற்றப்படாம, சண்ட போடாம சத்தம் போடாம இருந்தா ஒரு 12 மணி நேரம் நாம உயிரோட இருக்கலாம் என நயன்தாரா பேசும் டயலாக்கின் போதே பதற்றப்படும், சத்தம், சண்டை போடும் காட்சிகள் காட்டப்பட்டு அதிர வைக்கிறது ஓ2 திரைப்படத்தின் டீஸர்.

நயன்தாரா நடிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஜி. எஸ் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ஓ2.  இந்த படம் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.  

நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட தனது எட்டு வயது மகன், அவனுக்கான ஆக்ஸிஜன் சிலிண்டருடன்  நயன்தாரா பயணிக்கும் பேருந்து விபத்தில் சிக்குகிறது. மலைப்பகுதியிலிருந்து விழுந்த பேருந்து வெகு ஆழத்தில் சிக்கிக்கொள்ள அங்கே இருக்கும் பயணிகள் காப்பாத்துங்க காப்பாத்துங்க என கூச்சலிடுகின்றனர். நயன்தாராவோ தனது மகனையும் வைத்துக் கொண்டு, நிலைமையை சமாளிக்க முயற்சிக்க, சக பயணிகளுக்குள் சண்டை. 

அவர்களை சமாதானம் செய்து பதற்றப்படாமல், பயப்படாமல் சண்டை போடாமல் இருந்தால் 12 மணி நேரம் உயிரோட இருக்கலாம் என கூறுகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் அனைவருக்கும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட, நயன்தாராவிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக சண்டை ஏற்படுகிறது. தனது மகனைக் காக்க ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவை எனும்பட்சத்தில் மற்றவர்களை சமாளித்து எப்படி மகனை காப்பாற்றினார் என்பதே கதை.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்