Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,170.45
-220.05sensex(-0.29%)
நிஃப்டி22,888.15
-44.30sensex(-0.19%)
USD
81.57
Exclusive

Nayanthara Vignesh Honeymoon Place: ஹனிமூனுக்கு நோ சொன்ன நயன்…! ஆனா, ஹனிமூன் போனா இங்க மட்டும் தான்…!

Gowthami Subramani [IST]
Nayanthara Vignesh Honeymoon Place: ஹனிமூனுக்கு நோ சொன்ன நயன்…! ஆனா, ஹனிமூன் போனா இங்க மட்டும் தான்…!Representative Image.

Nayanthara Vignesh Honeymoon Place: தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகைகளுள் ஒருவரான நயன்தாராவிற்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கும் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் கல்யாணம் முடிந்த பிறகு, ஹனிமூன் செல்வதைக் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இங்குப் பார்க்கலாம்.

மலர்ந்த காதல்

நானும் ரௌடி தான் திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன், அந்த படப்பிடிப்பின் போதே நயன்தாராவைக் காதல் செய்ய துவங்கி விட்டார். அந்தப் படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே நயனை நினைத்து, அவர்களுக்காகவே விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்கள். அந்த அளவுக்கு விக்னேஷ் சிவன், நயன்தாராவைக் காதலித்துள்ளார் (Nayan Love Story in Tamil).

A person and person posing for a picture on a stage

Description automatically generated with medium confidence

டேட்டிங் டு கல்யாணம்இவர்கள் இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், 6 வருடங்களாக டேட்டிங்கிலேயே இருந்துள்ளது. இரு வீட்டாரின் ஒப்புதலுடன், இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கான அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டனர். அது மட்டுமல்லாமல், இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றில் நயனின் கையில் உள்ள மோதிரம், அவர்கள் இருவருக்கும் நிச்சயம் முடிந்து விட்டது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர் (Nayanthara Vignesh shivan Marriage).

இவர்கள் இருவருக்கும் எப்போது கல்யாணம் நடக்கும் என எதிர்பார்த்திருந்தனர் ரசிகர்கள். இவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகுமோ என்று கவலை கொண்டிருந்த நேரம் அது. உடனே நயனிடம் இருந்து வந்த ஒரு ஹேப்பியான நியூஸ் ரசிகர்களுக்கு ஆனந்தத்தை அளித்தது.

திருமணத்தில் திரைப் பிரபலங்கள்

மகிழ்ச்சியான தருணத்தில், மிகுந்த ஆனந்ததுடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஜூன் 9 ஆம் நாளான இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், 200 க்கும் அதிகமான திரைப் பிரபலங்கள் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது (Vignesh Nayanthara Marriage Photos).

 

A person and person posing on a stage

Description automatically generated with medium confidence

அதன் படி, மாமல்லபுரத்தில் நடைபெற்ற இவர்களின் திருமணத்திற்கு ஷாருக்கான், மற்றும் இன்னும் சில திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு ஆசிர்வதித்தனர். அது மட்டுமல்லாமல், 1 லட்சம் பேருக்குக் கல்யாண விருந்து வழங்கப்படப் போவதாகத் தெரிவித்தனர்.

ஹனிமூனுக்கு நோ சொன்ன நயன்

அனைவரும் எதிர்பார்த்த படி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு அடுத்து யோசிப்பது ஹனிமூனைப் பற்றி தான். இதை நயன், விக்கி முடிவு செய்கிறார்களோ இல்லையோ? அதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாய் இருந்தனர். ஆனால், நயன்தாரா ஹனிமூனுக்கு நோ சொல்லி விட்டதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருக்கின்றனர் (Nayanthara Say No to Honeymoon).

A picture containing person

Description automatically generated

நோ சொன்னதுக்கு ரீசன்

அஜித் நடிக்கும் AK 62 படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் வொர்க் உள்ளதாம். நயன்தாரா, சல்மான்கானுடன் நடித்து வருவதாகவும், மற்றும் இன்னும் சில பிஸி செட்யூலால் இருவரும் ஹனிமூன் பிளேனை கேன்சல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தது.

ஹனிமூன் போனா இந்த இடம் தான்

அப்படி ஒரு வேளை இருவரும் ஹனிமூன் போக வேண்டும் என்று நினைத்தால், அது கண்டிப்பாக நயன்தாராவுக்குப் பிடித்த இடமாகத் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது (Nayanthara Favourite Places to Go for Honeymoon). சமீபத்தில் இவர்கள் கோவா-விற்கு ட்ரிப் சென்று, அங்கு எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வந்தன. இதையடுத்து, இவர்கள் ஹனிமூன் பிளேன் பற்றிய எந்தத் தகவலும் இன்னும் கிடைக்கவில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்