Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nenjuku Needhi Tamil Review: சமூகத்தின் கூக்குரல்…! இன்னொரு ஜெய் பீமாக திகழும் நெஞ்சுக்கு நீதி படத்தின் திரைவிமர்சனம்.....

Manoj Krishnamoorthi May 20, 2022 & 11:15 [IST]
Nenjuku Needhi Tamil Review: சமூகத்தின் கூக்குரல்…! இன்னொரு ஜெய் பீமாக திகழும் நெஞ்சுக்கு நீதி படத்தின் திரைவிமர்சனம்.....Representative Image.

சாதி மதம் இரண்டும் மனிதனின் மனிதத்தைக் கொன்று மீண்டும் அவனை மிருகமாக்கும் என அறிஞர்கள் பலர் கூறியும் இன்னும் சில இடங்களில் அந்த வெட்டி சுமையை கௌரவம் எனக் கொண்டாடும் கூட்டத்திற்கு அவர்களின் தவறைச் சுட்டிக் காட்டவும் என்றாவது இந்த கொடுமையான தீண்டாமையில் இருந்து முன்னேற ஒரு விடியல் வராதா எனக் காத்திருக்கும் கூனிய கூட்டத்தின் விடியல் ஒளியின் சிறிய கீற்றாக வெளிவந்த 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் உணர்ச்சிகரமான விமர்சனத்தைக் காண..! இவ்வாசகம் சரியான தேர்வுதான் பின்தொடருங்கள்! 

கதைக்களம் (Storyline- Nenjuku Needhi Tamil Review)

தீண்டாமையில் ஊறிப்போன கிராமம் அங்கு சாதி பெருமையில் திளைத்த சமுகம் மற்றொரு சமுகத்தைத் துன்புறுத்தி வர அவர்களின்  துயரில் தாங்கும் தோழனாகவும் அங்கு நடக்கும் அநீதிக்கு எதிரான நெருப்பாக வரும் நேர்மையான காவல்துறை அதிகாரியே நம் கதையின் கதாநாயகன் (உதயநிதி ஸ்டாலின்) ஆவார்.

சட்ட ஒழுங்கைக் காக்கப் போராடும் காவல்துறை அதிகாரியும் தீண்டாமையின் உச்சத்தில் இருக்கும் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளும் அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளுமே நெஞ்சுக்கு நிதி திரைப்படத்தின் கதைக்களம் ஆகும். 

கதாபாத்திரம் (Nenjuku Needhi movie cast)

உதயநிதி ஸ்டாலின், ஆரி அர்ச்சுனன், தன்யா ரவிசந்தரன், இளவரசு, மயில்சாமி, சுரேஷ் சக்கரவர்த்தி,  சிவாணி. 

திரை விமர்சனம் (Nenjuku Needhi Tamil Review)

சட்ட மேதை அம்பேத்கரின் கோட்பாட்டைப் பதியவைக்க பல்வேறு இடங்களில் காண்பித்து இந்த நாடு இப்போதும் அதே தீண்டாமையில் தான் இருக்கிறது என நேர்த்தியாகக் காண்பித்திருப்பது இத்திரைப்படத்துக்கு இயக்குநர் அருள் ராஜா கொடுத்திருக்கும் ஆணித்தரமான பலமாகும். இந்தி மொழியில் மிகப்பெரிய புகழ் பெற்ற 

"ஆர்டிகிள் 15" திரைப்படத்தின் ரீமேக்காக இருந்தாலும் தமிழ் ரசிகருக்கு தகுந்தவாறு தெளிவாக நம் வட்டாரத்தின் நடைமுறையைக் காட்டியிருப்பது இந்த படத்துக்கு இன்னொரு அசைக்க முடியாத பலமாகும்.

ஆரியின் எதிர்மறையான கதாபாத்திரம் படத்துக்கு நல்ல பக்கபலமாக இருக்கிறது, கதைக்கு தேவையான ஆணவத்துடன் வரும் எதிர்மறை கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்தி கதாநாயகனுக்கு எதிராக நிற்பது திரைக்கதையில் விருவிருப்பை உருவாக்கியது. நிதானமான காவல்துறை அதிகாரியாக தன் நடிப்பைத் திறம்பட வெளிப்படுத்தி கம்பீரமான காவல்துறையின் புலன் ஆய்வு திறனை வெளி புணர்ந்து திரையில் காட்டியதில் உதயநிதி போலிஸ் அதிகாரியாக வாழ்ந்துள்ளார்.    

மேலும் துணை கதாபாத்திரத்தில் வரும் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் மயில்சாமி கதையின் போக்கிற்கு முக்கியமான காரணமாகும். சாதியின் ஆக்கிரமிப்பில் இருக்கும் சமுகத்தைத் தன் வசனங்களால் தெளிவுபடுத்திய யுகபாரதியின் வசனம் சமுக மாற்றத்தின் ஓர் அச்சாணி என்றே கூறலாம். 

மனிதனுக்குள் புதைந்திருக்கும் மனித நேயத்தை எழுப்பும் பாடல் வரியும், திரைக்கதையின் ஓட்டத்தில் இருந்து தடம் மாறாமல் நகர்த்திடும் பின்னணி இசையும் திரைப்படத்துக்கு ஒரு பலமாக உள்ளது.

திரைக்கதை  - 4/ 5

கதை                - 3.75/ 5

ஒளிப்பதிவு    - 3.5/ 5

வசனம்            - 4.5/ 5

இசை                - 3.75/ 5 

இயக்கம்          - 4/ 5

மொத்தத்தில், சமுகத்தில் புரையோடிய சாதியை சீர்திருத்தச் செய்யும் முயற்சியில் ஓர் அங்கமே இந்த “நெஞ்சுக்கு நீதி” திரைப்படமாகும். ஒவ்வொரு மனிதனும் தன்னுள் இருக்கும் மிருகத்தனத்தைத் தொலைக்கப் பார்க்க வேண்டிய திரைப்படமாகும்.

இதுபோன்ற சுவாரஸ்ய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்